Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு மாநகராட்சி வரி வசூலில் கூடுதல் கவனம் தேவை

Print PDF

தினகரன் 15.06.2010

அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு மாநகராட்சி வரி வசூலில் கூடுதல் கவனம் தேவை

பெங்களூர், ஜூன் 15: மாநகராட்சி அதிகாரிகள் வரி வசூலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மேயர் நடராஜ் உத்தரவிட்டார்.

வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேற்று மேயர் நடராஜ் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது துணை மேயர் தயானந்த், மாநகராட்சி கமிஷனர் பரத்லால் மீனா, ஆளும¢கட்சித் தலைவர் கட்டா சத்யநாராயணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

2010&11ம் நடப்பு நிதியாண்டில் வரி வசூல் திருப்திகரமாக இல்லை. வரி வசூல் பின்தங்கியதற்கு காரணம் என்ன என்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட மேயர், வரி வசூல் குறைய ஊழியர் பற்றாக்குறை காரணமா? வரி செலுத்தாத உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்புகிறீர்களா? மாநகராட்சியில் எவ்வளவு சொத்து உள்ளது என்பது தெரியுமா? போன்ற பல கேள்விகளை அதிகாரிகளிடம் எழுப்பினார். வரி வசூலிப்பதில் சிக்கல் நிலவுவதற்கான காரணத்தை விளக்கமாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கடந்தாண¢டு மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாநகராட்சி நடைபெற்றது. ஆனால் தற்போது மக்களாட்சி நடக்கிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பது நமது கடமை. இதற்கு பணம் தேவை என்பதால் வரி வசூலிப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது. வரி பாக்கிகளை கண்டிப்பாக வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

விருதுநகர் நகராட்சியில் வீடுகள், தொழிற்சாலைகள் கடைகளில் வரி ஏய்ப்பு மறு ஆய்விற்கு குழு வருகிறது

Print PDF

தினகரன் 14.06.2010

விருதுநகர் நகராட்சியில் வீடுகள், தொழிற்சாலைகள் கடைகளில் வரி ஏய்ப்பு மறு ஆய்விற்கு குழு வருகிறது

விருதுநகர், ஜூன் 14: விருதுநகரில் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் முறையான வரி செலுத்ததால் நகராட்சிக்கு கோடிக்கணக்கில் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மறு வரி சீரமைப்பு ஆய்வுக்குழு வர உள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உள்ள 102 நகராட்சிகளில் அதிக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இருந்தும் வரி வருமானத்தில் குறைந்த நகராட்சியாக விருதுநகர் உள்ளது. குறைந்த வரி வருமானம் காரணமாக நகராட்சி ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறித்த தேதியில் சம்பளம் வழங்க முடிவதில்லை. நகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் முறையாக நிறைவேற்றப்பட முடியவில்லை.

விருதுநகரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் அதிக கடைகள், 100 எண்ணெய் மில்கள், 40 புண்ணாக்கு மில்கள், 10 பெரிய தொழிற்சாலைகள், 100 குடோன்கள், 10 மல்லி மில்கள், 50 திருமண மண்டபங்கள் உள்ளன. ஆனால் நகராட்சியின் ஆண்டு வரி வசூல் ரூ.2 கோடிக்கும் குறைவாக உள்ளது.

மேலும் வீடுகளின் உரிமையாளர்கள் பலர், கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் பலர் பல வருடங்களாக வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். மாவட்ட தலைநகராகி 25 ஆண்டுகள் ஆன பின்னரும் அடிப்படை வசதிகள் இல்லை. கடந்த ஆண்டு வரி உயர்த்தப்பட்டது. அப்போது முறையாக ஆய்வு செய்யாமல் கடைசியாக கட்டிய வரியில் 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தப்பட்டது.

குடிசை, ஓட்டு வீடுகள் இருந்த பல இடங்கள் இப்போது மாடி வீடுகளாகவும், காம்ப்ளெக்ஸ்களாகவும் மாறி விட்டன. ஆனால் வரி மட்டும் மாற வில்லை. 6 மாத வரியாக ரூ.100 வரையே செலுத்தி வரும் கட்டிடங்கள் பல உள்ளன. நகரின் வெளிப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு முதல் கட்ட வரி கூட நிர்ணயம் செய்யப்படவில்லை.இதனால் ஒவ்வொரு திட்டத்திற்கும் அரசின் நிதியை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது. வணிக நகரில் வருமானம் இல்லையா என அரசு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வரி வசூல் தொடர்பாக மறு ஆய்வுக்குழுவை விருதுநகருக்கு அனுப்ப உள்ளது. இந்த குழு நகரில் உள்ள கட்டிடங்கள் முழுமையாக அளந்து வரி வசூல் நிர்ணயம் செய்யும்.

இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "விருநகரில் எந்த பணியினையும் செய்ய முடியவில்லை. நகரில் தேங்கும் குப்பைகளை அள்ள பணம் தர முடியவில்லை. ராணிப்பேட்டை நகராட்சியில் மறு ஆய்வுக்குழுவின் ஆய்விற்கு பின்னர் வரி வசூல் நிலைமை சீரடைந்துள்ளது. அதே போல் விருதுநகரில் மறு ஆய்வுக்குழுவினை விரைவில் அனுப்ப அரசு முடிவெடுத்துள்ளது. குறைந்த வரி செலுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டால் வரி ஏய்ப்பு செய்த காலத்திற்கு உண்டான வரி மற்றும் அபராதம் சேர்த்து கட்ட வேண்டி வரும்" என்றனர்

 

சொத்து வரி கட்டாவிட்டால் வீட்டு முன்பு தண்டோரா போட்டு ஜப்தி செய்யப்படும்

Print PDF

தினகரன் 08.06.2010

சொத்து வரி கட்டாவிட்டால் வீட்டு முன்பு தண்டோரா போட்டு ஜப்தி செய்யப்படும்

தக்கலை, ஜூன் 8: பத்மனாபபுரம் நகராட்சி ஆணையாளர் செல்லமுத்து விடுத்துள்ள அறிக்கை:

பத்மனாபபுரம் நகராட்சிக்கு 2009&10ம் ஆண்டு சொத்து வரி 47.97 லட்சம் தொகை வசூல் செயல்பட்டுள்ளது. ரூ. 10 லட்சத்து 60 ஆயிரம் நிலுவையாக உள்ளது. நிலுவை தொகையினையும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு 2010&11&ம் முதலாண்டுக்கான சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை கட்டணம், நிலுவையின்றி இம்மாதத்திற்குள் செலுத்திட வேண்டும். வரி செலுத்த தவறினால் உரிமையாளர் வீட்டு முன்பு தண்டோரா போட்டு ஜப்தி செய்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படுவதுடன் குடிநீர் குழாய் இணைப்பும் துண்டிக்கப்படும். இதனை தவிர்க்கும் பொருட்டு நிலுவைத் தொகையை நகராட்சி அலுவலகத்தில் செலுத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Page 79 of 148