Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

சென்னை மாநகராட்சி வரி வசூல் ரூ.490 கோடி

Print PDF

தினமணி 01.04.2010

சென்னை மாநகராட்சி வரி வசூல் ரூ.490 கோடி

சென்னை, மார்ச் 31: 2009-10 நிதியாண்டில் சொத்து வரி மற்றும் தொழில் வரியாக சென்னை மாநகராட்சி ரூ.490 கோடி வசூல் செய்துள்ளது.இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் ரூ.76 கோடி கூடுதலாகும்.

சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு நிதியாண்டும் சொத்து வரி மற்றும் தொழில் வரி ஆகியவை முழுமையாக வசூலிக்கப்படாமல், பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்தது.
இந்த நிலுவை வரி மற்றும் உடனுக்குடன் சொத்து வரி செலுத்துவதை உறுதி செய்யவும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முழுவதும் கம்ப்யூட்டர் மயம், எஸ்.எம்.எஸ். மூலம் சொத்து வரி விவரங்களைத் தெரிவிப்பது, சொத்து வரி நிலுவை குறித்து நேரடியாகவும், நோட்டீஸ் மூலமும் பொது மக்களுக்குத் தெரிவிப்பது, பூட்டப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்கள், கடைகளின் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டது.இந்த நடவடிக்கைகள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் வரி வசூல் அதிகரித்துள்ளது. 2008-09 நிதியாண்டில் சொத்து வரி ரூ.323 கோடியும், தொழில் வரி ரூ.91 கோடியும் (மொத்தம் ரூ.414 கோடி) வசூலிக்கப்பட்டது.

இந்த நிதியாண்டில் சொத்து வரி வசூல் இலக்கு ரூ.350 கோடி நிர்ணயிக்கப்பட்டு, ரூ.363.83 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தொழில் வரி வசூல் இலக்கு ரூ.101 கோடி நிர்ணயிக்கப்பட்டு, ரூ.126 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடைசி நாளான புதன்கிழமை (மார்ச் 31) ரூ.20 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், வரி உயர்வு செய்யாமல், முதன் முறையாக சென்னை மாநகராட்சியின் வரி வசூல் ரூ. 490 கோடியைத் தொட்டுள்ளது.இந்த நிதியாண்டில் சொத்து வரி செலுத்தாத 86 ஆயிரம் வணிக நிறுவனங்களுக்கும், 10 லட்சம் தனி நபர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 01 April 2010 09:48
 

வரி வசூலிப்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை! விழுப்புரம் நகராட்சி சேர்மன் உறுதி

Print PDF

தினமலர் 01.04.2010

வரி வசூலிப்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை! விழுப்புரம் நகராட்சி சேர்மன் உறுதி

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக் கப்படும் என சேர்மன் ஜனகராஜ் தெரிவித்தார்.

விழுப்புரம் நகர் மன் றக் கூட்டம் சேர்மன் ஜனகராஜ் தலைமையில் நேற்று காலை நடந்தது. கமிஷ னர் சிவக்குமார், மேலா ளர் லட்சுமி நாராயணன், பொறியாளர் பார்த் திபன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:

கவுன்சிலர் பாபு: மயான கட்டடம் அருகே கழிப்பிடம் சுகாதாரமின்றி உள்ளதை சீரமைக்க வேண்டும்.

கணேஷ்சக்திவேல்: நவீன மயானத்திட்டத் திற்கு நகராட்சி செலவு என்ன?. குறைந்த செலவில் கட்டக் கூடிய நிதியை வீணடித்துள்ளீர்கள்.

செங்குட்டுவன்: பாதாள சாக்கடைப் பைப்புகள் உடைந்து தரமற்ற வேலை செய்யப்படுகிறது. 30 கோடி நிதி திட் டத்தினை கண்காணிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர்.

சேர்மன்: நகராட்சி மூலம் 56 லட்சம் ரூபாய் செலவில் மெயின் கட்டடங்களும், இதில் 36 லட் சம் செலவில் எரிவாயு உபகரணங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது. இத் திட் டத்தை தமிழகத்தில் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக செய் கின்றனர். இதில் கணக் குப் பார்த்து குழப்ப வேண் டாம். பாதாள சாக்கடைத் திட்டம் குடிநீர் வாரியத்தினர் செய்கின்றனர். அங்கு நமது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ரகுபதி: நகராட்சி சமுதாயக்கூட கட்டடங்களில் உபகரணங்கள் மாற்றுவதாக செலவினங்கள் தொடர்கிறது. இதற்கு பதிலாக டெண்டர் வைத்து செய்ய வேண்டும். குடிநீருக்கு 200 திருட்டு கனெக் ஷன்கள் உள்ளது. ஓட் டல்களில் வரி கட்டாமல் தண்ணீர் பிடிக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேர்மன்: ஒரு சில கவுன்சிலர்களே வரி பாக்கி வைத்துள்ளனர். திருட்டு கனெக்ஷன் எடுப் போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரி செலுத்தாதவர்கள் மீது யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் அக்கரையின்றி உள்ளனர். தவறு செய்யும் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர். நகரில் உள்ள ஏழை குடிசைவாசிகளுக்கு பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீர் வரி ரத்து செய்யப் படும். இவர்களுக்காக 2.75 கோடி ரூபாய் நகராட்சி சார்பில் செலவினங்கள் ஏற்கப்படும்.

பஞ்சநாதன்: ஓட்டல்களில் சுகாதாரமற்ற நிலை உள்ளதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

கலைவாணன்: விழுப்புரத்தில் பிளாஸ்டிக் பொருள் உபயோகத்தால் சுகாதார சீர்கேடு உள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும்.

செல்வராஜ்: பென்னாகரம் இடைத் தேர்தல் தி. மு.., வெற்றிக்கு முதல் வர் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.

விவாதத்தில் குறுக் கிட்ட மல்லிகா உள்ளிட்ட அ.தி.மு.., கவுன்சிலர்கள் கட்சி பாராட்டுக் களை வெளியே வைத்துக் கொள்ளுங்கள், மக்கள் பிரச்னை பற்றி இங்கு பேசுங்கள் என்றனர்.

மேலும் அ.தி.மு.. ஆதரவில் வெற்றி பெற்ற நீங்கள் எங்களை கண் டித்து பேச தகுதியில்லை. முதலில் ஒரு கட்சியில் நிலையாக இருங்கள் என அ.தி.மு.., வினர் கடுமையாக விமர்சித்தனர்.

ஆவேசமடைந்த செல் வராஜ், எனக்கு ம.தி. மு.., பிடிக்கவில்லை. அதனால் தி.மு.., விற்கு வந்தேன் என்று விளக்கமளித்தார். இதனால் கூட் டத்தில் பரபரப்பு ஏற் பட்டது.சேர்மன் தலையிட்டு, நல்லது செய்ததால் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் நாமும் நல்லது செய்து மக்களிடம் நற்பெயர் எடுக்க வேண் டும் என கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினார்.

Last Updated on Thursday, 01 April 2010 07:04
 

ஆரணி நகராட்சிக்கு வரிபாக்கி 3 கோடியே 20 லட்சம் ரூபாய் : கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர் 01.04.2010

ஆரணி நகராட்சிக்கு வரிபாக்கி 3 கோடியே 20 லட்சம் ரூபாய் : கமிஷனர் தகவல்

ஆரணி : 'ஆரணி நகராட்சிக்கு 3 கோடியே 20 லட்சம் ரூபாய் வரிபாக்கி உள்ளது' என்று கமிஷனர் சசிகலா கூறினார்.

ஆரணி நகராட்சி கூட்டம், அதன் தலைவர் சாந்தி லோகநாதன் தலைமையில் நகர் மன்ற கூடத்தில் நேற்று நடந் தது. கமிஷனர் சசிகலா முன்னிலை வகித்தார். மேனேஜர் ராமஜெயம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.., சிவானந்தம் கலந்து கொண்டார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

ரமேஷ் (திமுக): ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் சிமென்ட் சாலை அமைத்த 3வது நாளில் ஜல்லிகள் பெயர்ந்துள்ளது. எனவே, தரமான சிமென்ட் சாலை அமைக்க கான்டிராக்டரை எச்சரிக்க வேண்டும்.

எம்.எல்..,: அதற்கு கான்டிராக்டர் பொறுப்பேற்க முடியாது. சிமென்ட் ரோடு அமைக்கும்போது நகராட்சி அதிகாரிகள், உடன் இருந்து பார்க்க வேண்டும்.

கண்ணன்(தேமுதிக): 4 ஆண்டுகளில் 10வது வார்டில் 6 லட்சத்துக்கு மட்டும் பணிகள் நடந்துள்ளது.

எம்.எல்..,: 10வது வார்டுக்கு தேவையான பணிகளை எழுதிக் கொடுங்கள்.

ரத்தினகுமார் (மதிமுக): கோடை காலத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

எம்.எல்..,: நகராட்சி கமிஷனர், சேர்மன், அதிகாரிகள் இடையே தனியாக இது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கலாம்.

ரத்தினகுமார் (மதிமுக): நகரில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதற்கு தனியாக இடம் வாங்க வேண்டும்.

எம்.எல்..,: போளூர் ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சங்கர் (திமுக): தனியார் துப்புரவு பணியாளர்கள் சரியாக குப்பைகளை வாருவதில்லை.

எம்.எல்..,: முதலில் நன்றாக செய்தார்கள். இப்போது வேலையில் அக்கறை காட்டவில்லை. கமிஷனரிடம் டெண்டர் எடுத்தவரை அழைத்து எச்சரியுங்கள். இல்லை என்றால் டெண்டர் 'கேன்சல்' செய்வதாக கடிதம் அனுப்புங்கள்.

கண்ணன் (தேமுதிக): டவுன் பகுதியில் இலவச கலர் டி.வி., எப்போது வழங்கப்படும்?

எம்.எல்..,: இன்னும் 3 மாதத்தில் வழங்க உள்ளோம்.

ரத்தினகுமார் (மதிமுக): நகராட்சி அதிகாரிகள் 2 ஆயிரம் ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளவர்களை மிரட்டுகின்றனர். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேல் வரி பாக்கி வைத்துள்ளவர்களை கண்டுகொள்வதில்லை.

கமிஷனர்: கடந்த ஒரு மாதமாக தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் 50 சதவீதம் வரி வசூலாகி உள்ளது. அப்படி இருந்தும் சொத்து வரி ஒரு கோடியே 51 லட்சத்து 75 ஆயிரம், தொழில் வரி 87 லட்சத்து 97 ஆயிரம், குடிநீர் வரி 35 லட்சம், இதர வரியினங்கள் 47 லட்சத்து 65 ஆயிரம் என பல வரிகள் உட்பட மொத்தம் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, பாக்கி உள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக வரி வசூலிக்க வரும்போது அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். அதன் மூலம் 100 சதவீதம் வரி வசூல் செய்துவிட்டால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

சேர்மனுக்கு 'வாய்ஸ்' கொடுத்த எம்.எல்..,: பொதுவாக, நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு நகராட்சி தலைவரோ, கமிஷனரோதான் உரிய பதில் அளிக்க வேண்டும். ஆனால், நேற்று நடந்த ஆரணி நகராட்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எம்.எல்.., சிவானந்தமே, பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனால், 'கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு சேர்மனுக்கு பதிலாக, எம்.எல்.. பதில் சொல்றாரே' என தி.மு.., கவுன்சிலர்களே முணுமுணுப்புடன் கலைந்து சென்றனர்.

Last Updated on Thursday, 01 April 2010 06:52
 


Page 90 of 148