Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நூறுசத வரிவசூல்: 4 பேரூராட்சிகள் சாதனை

Print PDF

தினமலர் 01.04.2010

நூறுசத வரிவசூல்: 4 பேரூராட்சிகள் சாதனை

திருவிடைமருதூர் : திருவிடைமருதூர் பகுதியில் உள்ள நான்கு பேரூராட்சிகள் வரி மற்றும் வரிஇல்லா இனங்கள் ஆகியவைகளை நிலுவையின்றி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வரி என்பது பொதுமக்கள் அரசுக்கு செலுத்தும் பங்களிப்பாகும். இதனைக் கொண்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. வரி மற்றும் வரி இல்லா இனங்கள் என 2 வகைப்படும். சொத்துவரி, தொழில் வரி, என்பன வரி இனங்களாகும். இதேபோல் குடிநீர் கட்டணம், பேருந்து வசூல், சாலை ஓரக்கடைகள் வசூல், கடை லைசென்ஸ் மற்றும் உரிமக் கட்டணங்கள் ஆகியவை வரி இல்லா இனங்கள் ஆகும். இவ்விரு இனங்களையும் திருவிடைமருதூர், திருபுவனம், திருநாகேஸ்வரம், வேப்பத்தூர் ஆகிய பேரூராடசிகள் 2009-2010ம் ஆண்டிற்கு நிலுவையின்றி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. இத்தகவலை திருவிடைமருதூர், திருபுவனம், திருநாகேஸ்வரம், வேப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆனந்தன், சுரேஷ், சுந்தரமூர்த்தி, ராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 01 April 2010 06:35
 

சொத்து வரி வசூலிப்பில் ரூ.12 கோடி கூடுதல் வருவாய் : நிர்ணயித்த இலக்கையும் தாண்டி மாநகராட்சி அசத்தல் சாதனை!

Print PDF

தினமலர் 01.04.2010

சொத்து வரி வசூலிப்பில் ரூ.12 கோடி கூடுதல் வருவாய் : நிர்ணயித்த இலக்கையும் தாண்டி மாநகராட்சி அசத்தல் சாதனை!

சென்னை : சென்னை மாநகராட்சி, சொத்து வரியாக 350 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் நிர்ணயித்த அளவையும் தாண்டி 12 கோடி ரூபாய் அதிகமாக வசூலித்துள்ளது.

சென்னை நகரில் உள்ள ஐந்து லட்சத்து 20 ஆயிரம் கட்டடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டு வருகிறது. சொத்து வரியை உயர்த்தாமல், சொத்துவரி வசூலிக்கும் முறையை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2009-10ம் நிதி ஆண்டில், 350 கோடி ரூபாய் வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்தது. மார்ச் மாதம் 30ம் தேதி வரை 342 கோடி ரூபாய் வசூலானது.இறுதி நாளான நேற்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டும் வகையில், 20 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வரி வசூல் செய்தனர்.

சொத்து வரி, ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வரி பாக்கி வைத்திருப்பவர்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட கட்டடங்களில், பாக்கி தொகை குறித்து டிஜிட்டல் பேனர் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்தனர். 400 கட்டடங் களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன.
இதனால், சொத்து உரிமையாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக சொத்து வரியை கட்டினர். இதனால், சொத்து வரி வசூலிப்பு தொகை அதிகமானது. அதிகளவில் சொத்து வரி பாக்கி வைத் திருந்த சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்ததோடு, எச்சரிக்கை நோட்டீஸ்களை கட்டடங்களில் ஒட்டி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. பாரிமுனை, பெரியமேடு, திருவல்லிக் கேணி பகுதியில் ஜப்தி நடவடிக்கை மேற் கொண்டு அதிரடியாக சொத்து வரி வசூலிக்கப் பட்டது. இதனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி கூடுதலாக வரி வசூலித்து மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.

வரும் நிதியாண்டில் 2010 -11ல் 375 கோடி ரூபாய் வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் வரி மூலம் கடந்த 2009 -10 ஆண்டில் 101 கோடி ரூபாய் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மார்ச் 30ம் தேதி வரை 125 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தொழில் வரி வசூலிப்பை அதிகப்படுத்த, மாநகராட்சி வருவாய்த் துறையினர், நகரில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் தனிப் பட்ட முறையில் செயல்படும் நிறுவனங்கள் என கண்டறிந்து 86 ஆயிரம் பேருக்கு தொழில் வரி கட்டும்படி நோட்டீஸ் அனுப்பியது. ஏராளமானவர்கள் முன்வந்து தொழில் வரி செலுத்தியதால், தொழில் வரி வசூல் அதிகமானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 01 April 2010 06:15
 

சொத்துவரி விதிப்பில் மாற்றம்: வரி வசூலிப்போர் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 31.03.2010

சொத்துவரி விதிப்பில் மாற்றம்: வரி வசூலிப்போர் வலியுறுத்தல்

மதுரை:மதுரை மாநகராட்சியில் புதிய கட்டங்களுக்கு சொத்துவரி விதித்தல் மற்றும் அடிப்படை மதிப்பை, தெருக்களில் தரத்திற்கு ஏற்ப மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென, மதுரை மாநகராட்சி வரி வசூலிப்போர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மதுரையில் 2008 ஏப்ரல் முதல் பொதுவரி சீராய்வு அமல்படுத்தப்பட்டது. அதன் பின் கட்டப்பட்ட கட்டங்களுக்கு வரிவிதிப்பிற்கு, மாநகராட்சியில் உள்ள தெருக்கள் ஏ, பி,சி, டி., என தரம் பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வரிவிதிப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வரியை விட இது, 400 சதவீதம் அதிகமாக உள்ளது.

இதனால் வரி செலுத்துவோர் பாதிப்படைந் துள்ளனர். அதனால் தெருக்களின் தரம் பிரித்ததில் மாறுதல் செய்ய வேண்டும். மாநகராட்சி மறுபரிசீலனை செய்து, இதனை மாற்றியமைக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என சங்க தலைவர் யாகூப்கான், பொது செயலாளர் சையது மைதீன் தெரிவித்துள்ளனர்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:32
 


Page 91 of 148