Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

குடிநீர் வரி செலுத்துங்க

Print PDF

தினமலர் 31.03.2010

குடிநீர் வரி செலுத்துங்க

அரும்பாவூர்:அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் 2009-10ம் ஆண்டுக்கான குடிநீர் கட்டணங்களை இன்று(31ம்தேதிக்குள்) செலுத்த வேண்டும் எனவும், தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் படும் எனவும் அரும்பாவூர் பேரூராட்சி செயல் இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:29
 

மாநகராட்சி வரி வசூல் பணியில்...அசத்தல்!: சூரமங்கலம் முதலிடம்; பரிதாபத்தில் கொ.பட்டி

Print PDF

தினமலர் 31.03.2010

மாநகராட்சி வரி வசூல் பணியில்...அசத்தல்!: சூரமங்கலம் முதலிடம்; பரிதாபத்தில் கொ.பட்டி

சேலம்: சேலம் மாநகராட்சியில், 2009-10ம் ஆண்டு சூரமங்கலம் மண்டலத்தில் பல்வேறு வரியினங்கள் மூலம் 10 கோடியே 74 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவற்றின் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால், பல்வேறு முறைகேடு மற்றும் குளறுபடி காரணமாக வரி விதிப்பின் மூலம் சேலம் மாநகராட்சிக்கு சொற்ப அளவிலான தொகை மட்டுமே கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு நிதி ஆதாரத்தை பெருக்கி, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த சேலம் மாநகராட்சியில் வரி பணத்தை வசூல் செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர். வரி வசூல் பணியை எளிமையாக்கி, பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் வாகனம் ஏற்படுத்தப்பட்டது. எனவே, பொதுமக்கள் ஆர்வமுடன் தாங்களாகவே முன் வந்து வரி பாக்கியை செலுத்தி சென்றனர்.சூரமங்கலம் மண்டலத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 ஆகிய 14 வார்டுகள் உள்ளது. கடந்த 2010-11 ம் ஆண்டு இங்கு சொத்து வரி மூலம் நான்கு கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம் மூன்று கோடியே 66 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய், தொழில் வரி மூலம் 64 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி கடைகள் மூலம் 81 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய், குத்தகை வருவாய் மூலம் ஒரு கோடியே 44 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 10 கோடியே 74 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. அஸ்தம்பட்டி மண்டலத்தில் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, 12, 13, 14, 15, 16, 17, 29, 30, 31 ஆகிய 14 மண்டலம் உள்ளது. இங்கு சொத்து வரி மூலம் ஐந்து கோடியே இரண்டு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம் மூன்று கோடியே 99 லட்சத்து 5ஆயிரம் ரூபாய், தொழில் வரி மூலம் ஒரு கோடியே 31 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி கடைகள் மூலம் ஒரு கோடியே 68 லட்சம் ரூபாய், குத்தகை மூலம் 12 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 10 கோடியே 47 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

அம்மாப்பேட்டை மண்டலத்தில் ஒன்பது, 10, 11, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44 ஆகிய 16 வார்டுகள் உள்ளது. இங்கு சொத்து வரி மூலம் மூன்று கோடியே 27 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம் இரண்டு கோடியே 75 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய், தொழில் வரி மூலம் 80 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி கடைகள் மூலம் ஒரு கோடியே 62 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய், குத்தகை மூலம் ஒரு கோடியே 65 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 10 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60 ஆகிய 16 மண்டலங்கள் உள்ளது. இங்கு சொத்து வரி மூலம் மூன்று கோடியே 19 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய், குடிநீர் கட்டணம் மூலம் இரண்டு கோடியே 75 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய், தொழில் வரி மூலம் 29 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி கடைகள் மூலம் ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய், குத்தகை மூலம் 21 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் ஆறு கோடியே 63 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 14 வார்டுகளை உள்ளடக்கிய சூரமங்கலம் மண்டலம் வரி வசூல் பணியில் முதலிடம் பிடித்துள்ளது. அஸ்தம்பட்டி மண்டலம் இரண்டாவது இரண்டமும், அம்மாப்பேட்டை மண்டலம் மூன்றாவது இடமும் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. மூன்று மண்டலங்களிலும் 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால், 16 வார்டுகளை உள்ளடக்கிய கொண்டலாம்பட்டி மண்டலத்தில் வெறும் ஆறு கோடியே 63 லட்சம் மட்டும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மூன்று ஆண்டாகவே கொண்டலாம்பட்டி மண்டலத்தில் குறைவான தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் பிற மண்டலங்களை போல, கொண்டலாம்பட்டியிலும் வரி வசூல் பணியில் அதிகாரிகள் தீவிரம் செலுத்தி வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:25
 

வரி செலுத்தாததால் கேபிள் 'டிவி' இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமலர் 31.03.2010

வரி செலுத்தாததால் கேபிள் 'டிவி' இணைப்பு துண்டிப்பு

போடி:போடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கேபிள் 'டிவி' இணைப்புகளுக்கு வரி செலுத்தாததினால் நான்கு மணி நேரம் கேபிள் இணைப்பை நகராட்சி நிர்வாகம் துண் டித்தது. போடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1600 க்கும் மேற்பட்டகேபிள் இணைப்புகள் உள்ளன. கேபிள் நடத்தி வரும் ஆப்ரேட்டர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.

நகராட்சி நிர்வாகமும் வரி செலுத்த கோரி பல முறை கேபிள் ஆப்ரேட்டர்களிடம் வலியுறுத்தியும் வரி செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் நேற்று நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் நேற்று கேபிள் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் நகராட்சி பகுதியில் கேபிள் 'டிவி' ஒளிபரப்பு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கேபிள் ஆப்ரேட்டர்கள் ஒன்று கூடி நான்கு மணி நேரத்தில் நகராட்சிக்கு செலுத்த வேண் டிய ஐந்து லட்சத்து11 ஆயிரம் ரூபாய் கேபிள் வரிக் கான நிலுவை தொகையை நகராட்சிக்கு செலுத்தினர். இதையடுத்து கேபிள் ஒளிபரப்பு மீண்டும் துவக்கப் பட்டது.

Last Updated on Wednesday, 31 March 2010 06:21
 


Page 92 of 148