Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நிலுவை வரியை உடன் செலுத்தநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

Print PDF

தினமலர் 29.03.2010

நிலுவை வரியை உடன் செலுத்தநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

திருவாரூர்:திருவாரூர் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாத நபர்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.திருவாரூர் நகராட்சிக்கு பொதுமக்கள் 2009-10ம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள், குத்தகைதாரர்கள் செலுத்த வேண்டிய குத்தகை இனங்கள், கடை வாடகைகள் ஆகியவற்றை உடனடியாக எந்தவித நிலுவையும் இன்றி செலுத்த வேண்டும். அவ்வாறு உரிய காலத்தில் செலுத்தாதவர் மீது நகராட்சி நிர்வாகம் சார்பில் குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் தகுந்த அபராதமும் விதித்து வரிவசூல் செய்யப்படும்.

Last Updated on Monday, 29 March 2010 06:09
 

அரக்கோணம் நகராட்சியில் நிலுவை வரிபாக்கி ரூ. 4 கோடி

Print PDF

தினமலர் 29.03.2010

அரக்கோணம் நகராட்சியில் நிலுவை வரிபாக்கி ரூ. 4 கோடி

அரக்கோணம்:அரக்கோணம் நகராட்சியில் இதுவரை 1.95 கோடி வரி வசூல் செய்யப் பட்டுள்ளது. இன்னும் 4 கோடியே 42 லட்சம் ரூபாய் வரி வசூல் ஆகாமல் உள்ளது. அரக்கோணம் நகராட்சியில் கடந்த 26ம் தேதி சொத்துவரி 1 கோடியே 8 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. வசூலாகாமல் உள்ள பாக்கித் தொகை ரூ.2 கோடியே 28 லட்சம். தொழில்வரியில் ரூ.10 லட்சத்து 37 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதம் 26 லட்சம் பாக்கி உள்ளது.

குடிநீர் கட்டணம் கடந்த 25ம் தேதி வரை ரூ.60 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதம் ரூ.80 லட்சம் பாக்கி உள்ளது. வரியில்லா இனம் (மார்க்கெட் கடைகள் உட்பட) ரூ.17 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் பாக்கியாக ரூ. 1 கோடியே 17 லட்சம் வசூல் ஆகாமல் உள்ளது.மொத்தத்தில் 25ம் தேதி வரை அனைத்து வரிகளும் சேர்த்து நகராட்சிக்கு ரூ.1.95 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதம் பாக்கி 4 கோடியே 52 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்படாமல் உள்ளது.

வசூல் மையங்கள்அரக்கோணம் நகராட்சியில் தினமும் வரி வசூல்கள் நகராட்சி வளாகத்தில் உள்ள கணினி மையத்திலும், பழனிப்பேட்டை துணை வரி வசூல் மையத்திலும் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் 5.30 மணி வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது.நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டண வரி, தொழில் வரி மற்றும் இதர வரிகள் அனைத்தையும் வரும் 31ம் தேதி நகராட்சியில் செலுத்தி ரசீது பெற்றுகொள்ள நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Last Updated on Monday, 29 March 2010 06:08
 

நகராட்சி சார்பில் ஜப்தி

Print PDF

தினமணி 26.03.2010

நகராட்சி சார்பில் ஜப்தி

திண்டிவனம்
, மார்ச் 25: திண்டிவனம் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வரி வசூலில் வரி செலுத்தாத வணிக வளாகம் ஒன்றை வியாழக்கிழமை ஜப்தி செய்யும் நடவடிக்கை நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளர் முருகேசன் உத்தரவின் பேரில், தீவிர வரி வசூல் நகராட்சி அதிகாரிகளால் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கணக்காளர் ரவி, வருவாய் உதவியாளர் சண்முகம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ஜோதிபாசு உள்ளிட்டோர் வரி செலுத்தாத வணிக வளாகங்களில் இருந்த பொருள்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் ரூ.1 லட்சம் வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இதே போல் வரி செலுத்தாத அனைத்து கடை மற்றும் வணிக வளாகங்களில் ஜப்தி நடவடிக்கை தொடருமென கூறினர். எனவே, இதனை தவிர்க்க நகராட்சிக்கு பாக்கி வரி செலுத்த வேண்டியவர்கள் விரைவில் செலுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

Last Updated on Friday, 26 March 2010 06:48
 


Page 94 of 148