Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

இந்த ஆண்டு முதல் "குடிநீர் கட்டணம், சொத்து வரி வீடு தேடி வந்து வசூலிக்கப்படும்" மேயர் வெங்கடாசலம் அறிவிப்பு

Print PDF

மாலை மலர் 22.03.2010

இந்த ஆண்டு முதல் "குடிநீர் கட்டணம், சொத்து வரி வீடு தேடி வந்து வசூலிக்கப்படும்" மேயர் வெங்கடாசலம் அறிவிப்பு

கோவை, மார்ச். 22-

கோவை மாநகராட்சியில் மின்னணு முறையில் ஏலம் விடுதல் மின்னணு கருவி மூலம் வீடு தேடி வரி வசூல் செய்யும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று மேயர் வெங்கடாசலம் கூறினார்.

மேயர் வெங்கடாசலம் கூறும்போது:-

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கட்டாய சீர் திருத்தங்களின்படி 100 சதவீத சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும்.

இந்த இலக்கை அடைய கையடக்க வரி வசூல் கருவிகளின் உதவியுடன் வீடு தேடி சென்று மக்களிடம் வரி வசூலிக்கப்படும். பொது மக்களின் வசதிக்காக மிகவும் எளிதான இணைய மூலம் கட்டணம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்படும்.

வரி வசூல் கருவியில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு குடிநீர் கட்டண கேட்புகள் உடனுக்குடன் கணக்கெடுப்பு செய்து உயர்த்தப்படும். அதற்குறிய வசூல் அதே இடத்தில் கருவியின் பயன் பாட்டுடன் வசூலிக்க இயலும்.

பொது மக்கள் மாநகராட்சி வரி வசூல் மையங்களுக்கு வந்து காத்திருந்து சொத்துவரி, குடிநீர் கட்டணம் முத லிய கட்டணங்களை செலுத்து வதை எளிதாக்கும் பொருட்டு அவர்களது இருப்பிடத்தில் இருந்தபடியே வங்கிகளின் கடன் மற்றும் பற்று அட்டைகள் வாயிலாக இக்கருவிகளின் மூலம் தொகை வசூல் செய்யப்பட்டு ரசீது வழங்கப்படும்.

அதேபோல மாநகராட்சியின் வணிக வளாக கடைகள் உள்ளிட்ட அனைத்து குத்தகை இனங்களுக்கும் நடத்தப்பட்டு வந்த பொது ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளியினை உள்ளாட்சி அமைப்புகளில் முதன்முறையாக கோவை மாநகராட்சியில் இந்தாண்டு முதல் மின்னனு முறையில் ஏலம் நடத்தப்படும்.

இவ்வாறு மேயர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

Last Updated on Monday, 22 March 2010 11:46
 

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பை துண்டிக்க முடிவு

Print PDF

தினமலர் 22.03.2010

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பை துண்டிக்க முடிவு

பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சிக்கு செலுத்த வேண் டிய வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை வரியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் படும் என என நகராட்சி கமிஷனர் மோனி தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மோனி கூறியதாவது: பெரியகுளம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, குழாய்வரி, சொத்துவரி மற்றும் குத்தகை இனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கியை மார்ச் 31 க்குள் செலுத்த வேண் டும். பொதுமக்கள் வசதிக்காக அனைத்து நாட்களிலும் வரி வசூல் செய்யப் பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேனி, கம்பம், சின்னமனூர், போடி, கூடலூர் உள்ளிட்ட நகராட்சிகளில் நூறு சதவீதம் வரி வசூல் செய்து வருகின்றனர். பெரியகுளம் நகராட்சி மட்டும் கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட நூறு சதவீதம் வரி வசூல் செய்யவில்லை. சென்ற ஆண்டு கமிஷனர் சரவணக்குமார் அதிகபட்சமாக 95 சதவீதம் வரி வசூல் செய்தார். இந் தாண்டு இது வரை 78 சதவீதம் வசூல் செய்யப் பட்டுள்ளது. மார்ச் 31 க்குள் வரி செலுத்தாவிட்டால் பாதாளசாக் கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப் படும் என்றார்.

Last Updated on Monday, 22 March 2010 10:08
 

அரக்கோணம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி : மண்டல நகராட்சி இயக்குனர் உத்தரவு

Print PDF

தினமலர் 22.03.2010

அரக்கோணம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி : மண்டல நகராட்சி இயக்குனர் உத்தரவு

அரக்கோணம் : அரக்கோணம் நகராட்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி அதிகாரிகளுக்கு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார்.அரக்கோணம் நகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் வரி மற் றும் வரியில்லா இனங்களின் வசூல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மண்டல நகராட்சி நிர் வாக இயக்குனர் பாலசுப்ரமணியம், நகராட்சி கமிஷனர் விமலா, உதவி இன்ஜினியர் நளினி மற்றும் வருவாய் அலுவலர்கள், உதவியாளர் கள் கலந்து கொண் டனர்.கூட்டத்தில் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் பேசியதாவது:

பொது சுகாதார பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மார்க்கெட் பகுதியில் கடை வைத்திருப்பவர்களிடம் நிலுவையில் உள்ள வரியை வசூல் செய்ய வேண்டும். வரி வசூல் செய்வது குறித்து வருவாய் உதவியாளர்களுக்கு அறிவுரை வழங்கியும், வசூலில் பின் தங்கியிருப்பது அதிருப்தியை தருகிறது.வரும் 31ம் தேதிக்குள் அனைத்து வரியினங்களிலும் முழு அளவில் வசூல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், தொடர்ந்து வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி மற்றும் இதர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து அவர், அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் நிலுவை வரியினங்களை செலுத்தியுள்ளார்களா என நேரடியாக ஆய்வு செய்தார்

Last Updated on Monday, 22 March 2010 10:08
 


Page 97 of 148