Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

ஓட்டல் கழிவுகளை அகற்ற கட்டணம் வசூலிக்க முடிவு

Print PDF

தினமலர் 16.03.2010

ஓட்டல் கழிவுகளை அகற்ற கட்டணம் வசூலிக்க முடிவு

திருப்பூர்: ஓட்டல், பேக்கரி, திருமண மண்டபங்களில் சேகரமாகும் கழிவுகளை அகற்ற, நல்லூர் நகராட்சியில் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஓட்டல், பேக்கரி, பழமுதிர் நிலையங்களின் கழிவுகளை, பொது சுகாதார திடக்கழிவு மேலாண்மை திட்டம் 2000ன் படி அகற்ற கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், திருமண மண்டபங்களில் சேகரமாகும் குப்பையை எடுக்கவும் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டம், குறிச்சி நகராட்சியில், ஓட் டல்களுக்கு மாதம் 300 ரூபாய்; பேக்கரி மற்றும் பழமுதிர் நிலையம் சிறியவைக்கு 25, நடுத்தரம் 50, பெரியது 100; திருமண மண்டபங்களில் ஒரு நிகழ் வுக்கு 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நல்லூர் நக ராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகராட்சி செயல் அலுவலர் சண்முகம் கூறுகையில், ""ஓட்டல், பேக்கரி, திருமண மண்டபங்களில் சேகரமாகும் கழிவுகளை எடுக்க, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ஏப்., முதல் இக்கட்டணம் வசூலிக்கப்படும்,'' என்றார்.

Last Updated on Tuesday, 16 March 2010 10:12
 

வரி செலுத்த நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமணி 15.03.2010

வரி செலுத்த நகராட்சி வேண்டுகோள்

மேட்டூர்,மார்ச் 14: மேட்டூர் நகராட்சியில் சொத்து வரி செலுத்தாதோர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் கே.கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:

மேட்டூர் நகராட்சியில் வசிப்போர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகையை உடனடியாக செலுத்தி நகராட்சி கணினி மையத்தில் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

தவறினால், எவ்வித முன்னறிவிப்புமின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Last Updated on Monday, 15 March 2010 10:07
 

களக்காடு பேரூராட்சியில் மார்ச் 20-க்குள் வரி செலுத்தாதவர் மீது நடவடிக்கை

Print PDF

தினமணி 12.03.2010

களக்காடு பேரூராட்சியில் மார்ச் 20-க்குள் வரி செலுத்தாதவர் மீது நடவடிக்கை

களக்காடு, மார்ச் 11: களக்காடு பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட வரிகளை மார்ச் 20-க்குள் செலுத்தாவிட்டால், குடிநீர் கட்டணம் துண்டிப்பு, நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளில் வசிப்பவர்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில்வரி, தொழில் உரிமகட்டணம், கடைகள் ஏல உரிம கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவைகளை மார்ச் 20-க்குள் பேரூராட்சிஅலுவலகத்தில் செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சட்டப்பூர்வமான நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்ற தேவையற்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆளாகாமல் உரிய வரிகளை உடனே செலுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 12 March 2010 10:12
 


Page 100 of 148