Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரி செலுத்த காலக்கெடு

Print PDF

தினமலர் 12.03.2010

வரி செலுத்த காலக்கெடு

சின்னமனூர்: சின்னமனூர் நகராட்சியில் குடிநீர் வரி, சொத்துவரி ஆகியவற்றை இம்மாதம் 15 க்குள் செலுத்த நகராட்சி நிர்வாகம் காலக் கெடு நிர்ணயித்துள்ளது. சின்னமனூர் நகராட்சி கமிஷனர் பக்கிரிசாமி கூறுகையில், "நகராட்சியில் வரி வசூல் அதிகளவு நிலுவையில் உள்ளது. இதனால் சொத்துவரி, தொழில்வரி, குத்தகையினங்கள், கடைவாடகை மற்றும் குடிநீர் வரி என வரி செலுத்தாதவர்கள் தங்கள் நிலுவை தொகைகளை இம்மாதம் 15க்குள் செலுத்திட வேண்டும். செலுத்தாவிட்டால் ஜப்தி, குடிநீர் இணைப்பு துண் டிக்கப்படும்' என்றார்.

Last Updated on Friday, 12 March 2010 06:38
 

அவிநாசி ரோட்டில் வரி வசூல் மையம்

Print PDF

தினமலர் 12.03.2010

அவிநாசி ரோட்டில் வரி வசூல் மையம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில், அவிநாசி ரோட்டில் புதிதாக வரி வசூல் மையம் துவக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களிடம், கடந்தாண்டுக்கான வரியினங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, மாநகராட்சி பணியாளர்கள் தீவிர வரி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். வீட்டு வரி உள்ளிட்ட வரியினங்களை வசூலிக்க, மாநகராட்சியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரி வசூல் மற்றும் ஜப்தி வாகனமும் மாநகராட்சி பகுதியில் வலம் வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக, மாநகராட்சி சார்பில், அவிநாசி ரோட்டில் புதிதாக வரி வசூல் மையம் துவக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 12 March 2010 06:18
 

தீவிர வரி வசூல் முகாம்: மார்ச் 20 வரை நீட்டிப்பு

Print PDF

தினமணி 11.03.2010

தீவிர வரி வசூல் முகாம்: மார்ச் 20 வரை நீட்டிப்பு

திருச்சி, மார்ச் 10: திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனம் ஆகியவற்றை வசூல் செய்யும் தீவிர வரி வசூல் முகாம் கடந்த மாதம் 18}ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம் மார்ச் 20}ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 20}ம் தேதிக்குள் வரியினங்கள் செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி எச்சரித்துள்ளார்.

Last Updated on Thursday, 11 March 2010 09:13
 


Page 101 of 148