Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

சங்கரன்கோவிலில் குடிநீர் கட்டணம் செலுத்த நாளை கடைசி

Print PDF

தினமணி 09.03.2010

சங்கரன்கோவிலில் குடிநீர் கட்டணம் செலுத்த நாளை கடைசி

சங்கரன்கோவில், மார்ச் 8: சங்கரன்கோவில் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்த புதன்கிழமை கடைசி நாள் ஆகும்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் க. முத்துக்கண்ணு வெளியிட்ட அறிக்கை:

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்டவற்றை இம்மாதம் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மேலும், வரி செலுத்தத் தவறினால் ஜப்தி நடவடிக்கை, நீதிமன்ற நடவடிக்கை, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரி வசூலிக்கப்படும். இதைத் தவிர்க்க பொதுமக்கள் உடனே வரி செலுத்த வேண்டும் என்றார் அவர்.

Last Updated on Tuesday, 09 March 2010 10:05
 

வரியை உடனே செலுத்த முசிறி அதிகாரி அழைப்பு

Print PDF

தினமலர் 06.03.2010

வரியை உடனே செலுத்த முசிறி அதிகாரி அழைப்பு

முசிறி: "முசிறி டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில்வரி ஆகியவற்றை விரைவில் செலுத்த வேண்டும்' என டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முசிறி டவுன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட ஒன்று முதல் 18 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் 2009-2010ம் ஆண்டுக்குரிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி ஆகியவற்றை உடனடியாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மீண்டும் மறு இணைப்பு ஆறு மாதத்திற்கு வழங்கப்படமாட்டாது. முசிறி டவுன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் உடனடியாக செலுத்தி முறையாக ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Last Updated on Saturday, 06 March 2010 10:19
 

அரசு கள்ளர் பள்ளி விடுதிகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமலர் 06.03.2010

அரசு கள்ளர் பள்ளி விடுதிகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கம்பம் : கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, ஆரம்பபள்ளி, மாணவியர் விடுதிகளில் வரி நிலுவையை காரணம் காட்டி, குடிநீர் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.கம்பம் நகராட்சியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வரி வசூல் மந்தமான நிலையில் உள்ளது. குடிநீர் வரி நிலுவை அதிகமாக உள்ளது. சொத்து வரி மற்றும் தொழில்வரியும் கணிசமாக நிலுவை உள்ளது. மார்ச் இறுதிக்கும் வரிவசூலை முடிக்கவேண்டும் என்பதற்காக நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களிலும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் குடிநீர் இணைப்பை துண்டிக்க சென்றனர். போக்குவரத்து கழகம் சார்பில் நான்கு லட்சம் ரூபாய் செலுத்தப் பட்டதையடுத்து துண்டிப்பு கைவிடப்பட்டது.

நேற்று காலை, அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி, கள்ளர் ஆரம்ப பள்ளி, வடக்குபட்டியில் உள்ள மாணவியர் விடுதி ஆகியவற்றில் நகராட்சி குடிநீர் பிரிவு பணியாளர்கள் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். தொடர்ந்து கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.
போலீஸ் குடியிருப்பு மற்றும் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றில் 20 ஆயிரம் ரூபாய் வரி பாக்கி இருந்தது. இரண்டு நாட்களில் செலுத்த ஏற்பாடு செய்வதாக இன்ஸ்பெக்டர் விநோஜி உறுதியளித்ததையடுத்து நகராட்சி பணியாளர்கள் திரும்பினர்.

கமிஷனர் அய்யப்பன் கூறுகையில், "வரி பாக்கி அதிகமாக வைத்துள்ள கள்ளர் மேல்நிலைப் பள்ளி, ஆரம்பபள்ளி, மாணவியர் விடுதிகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எந்த அரசு அலுலகமாக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Last Updated on Saturday, 06 March 2010 10:13
 


Page 103 of 148