Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நூறு சதவீத வரி வசூல் செய்து உதயேந்திரம் பேரூராட்சி சாதனை

Print PDF

தினமலர் 04.032010

நூறு சதவீத வரி வசூல் செய்து உதயேந்திரம் பேரூராட்சி சாதனை

வாணியம்பாடி:உதயேந்திரம் பேரூராட்சி 100 சதவீத வரி வசூல் செய்து மாவட்டத்திலேயே சாதனை படைத்துள்ளது.உதயேந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் தலைமையில் ஆர்.., நாகராஜ் அலுவலர்கள் தேவராஜ், சுப்பிரமணி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் தீவிர வரி வசூல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.சொத்து வரியாக 6 லட்சத்து 72 ஆயிரத்து 35ம், தொழில் வரி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 850ம், குடிநீர் கட்டணம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 320, வரியில்லா இனம் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 12 லட்சத்து 18 ஆயிரத்து 205 ரூபாயை வசூல் செய்து, மாவட்டத்திலேயே முதன் முறையாக உதயேந்திரம் பேரூராட்சி சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டும் இதே போன்று முழுமையாக வரி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

உதயேந்திரம் பேரூராட்சியில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக நிலுவை இல்லாமல் வரி வசூல் செய்து சாதனை படைக்க செயல்பட்ட செயல் அலுவலருக்கு பாராட்டு விழா நடந்தது. தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மணி, உதவியாளர் பேபி முன்னிலை வகித்தனர். பின்னர் கவுன்சிலர்கள், பணியாளர்கள் சங்க தலைவர் ரவி மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பாராட்டி, பேசினர்.

Last Updated on Thursday, 04 March 2010 06:27
 

சென்னை மாநகராட்சி அனுப்பிய தொழில் வரி நோட்டீஸ்: திருவொற்றியூர் வியாபாரிகள் அதிர்ச்சி

Print PDF

தினமணி 03.03.2010

சென்னை மாநகராட்சி அனுப்பிய தொழில் வரி நோட்டீஸ்: திருவொற்றியூர் வியாபாரிகள் அதிர்ச்சி

திருவொற்றியூர்,மார்ச் 2: சென்னை மாநகராட்சி அனுப்பிய தொழில் வரி நோட்டீஸôல் திருவொற்றியூர் வியாபாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திருவொற்றியூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தொழில் நடத்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளுக்கு தொழில் வரி செலுத்தக் கோரி சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தந்த நகராட்சியில்தான் தொழில் வரி செலுத்தப்படுவது வழக்கம். அதன்படி திருவொற்றியூர் பகுதியில் தொழில் நிறுவனங்களை நடத்துவோர் திருவொற்றியூர் நகராட்சியில்தான் வரி செலுத்த வேண்டும். இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வந்திருப்பது கண்டு வியாபாரிகள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். திருவொற்றியூர் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன்

இணைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2011-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் வரி வசூல் வந்துவிட்டது என்று சிலர் தெரிவித்தனர். இதனால் தொழில் வரியை திருவொற்றியூர் நகராட்சியில் செலுத்துவதா அல்லது சென்னை மாநகராட்சியில் செலுத்துவதா என வியாபாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தவறுதலாக நோட்டீஸ்:இப்பிரச்னை குறித்து திருவொற்றியூர் நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் கூறுகையில் ""வணிக வரித் துறையில் தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களின் முகவரிகள் பெறப்பட்டு அதன்படி சென்னை மாநகராட்சியின் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திருவொற்றியூர் முகவரிகளும் சேர்ந்துவிட்டன.

இது தவறுதலாக நடைபெற்ற ஒன்று. நோட்டீஸ் குறித்து யாரும் குழப்பம் அடைய வேண்டாம். தொழில் வரியை திருவொற்றியூர் நகராட்சியில் மட்டும் செலுத்தினால் போதுமானது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் தவறை ஒப்புக் கொண்டுள்ளனர்'' என்றார் கலைச்செல்வன்.

Last Updated on Wednesday, 03 March 2010 09:23
 

சொத்து வரி வசூலிக்க 300 நவீன கருவிகள்

Print PDF

தினமணி 03.03.2010

சொத்து வரி வசூலிக்க 300 நவீன கருவிகள்

சென்னை மாநகராட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சொத்து வரி வசூலிப்பதற்கான திட்ட அறிமுக நிகழ்ச்சியில் வரி வசூலிப்பவர்களுக்கு கையடக்க கருவியை வழங்ககப்பட்டது

சென்னை,மார்ச் 2: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதற்காக ரூ. 94 லட்சம் செலவில் 300 நவீன கையடக்க கருவிகள் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த கருவியின் மூலம் சொத்து வரி வசூலிப்பதால் எந்தெந்த அரையாண்டு காலத்துக்கான வரி வசூல் செய்யப்படுகிறது என்ற விவரம் உடனடியாக கணினியில் பதிவு செய்யப்படுவதோடு, வரி செலுத்துவோருக்கும் உடனடியாக ரசீது வழங்கப்படும்.

கருவிகளை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது:

நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.350 கோடி வரியில், இதுவரை ரூ.301 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. பல வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளாகக் கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரியைக் காட்டிலும், அதிகமாக வசூலிக்கும் ஊழியர்களுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்கப்படும் என்றார் மேயர் மா.சுப்பிரமணியன்.

Last Updated on Wednesday, 03 March 2010 09:19
 


Page 105 of 148