Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

காலி மனைகள் கணக்கெடுப்பு

Print PDF

தினமலர் 02.03.2010

காலி மனைகள் கணக்கெடுப்பு

மதுரை : மதுரை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள காலி மனைகளுக்கு "பொட்டல் வரி' செலுத்தப்பட வேண்டும். பல ஆண்டுகளாக புதிய கட்டடங்களுக்கே, வரி விதிக்கப்படாத நிலையில், காலி மனைகளுக்கு வரி வசூலிக்கப்படவில்லை.எந்தெந்த வார்டில் எத்தனை காலி மனைகள் உள்ளன என்ற கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இந்த வரியை ஒழுங்காக வசூல் செய்திருந்தாலே, நிதி நிலை வலுவாக இருந்திருக்கும். தற்போது வரி வசூலில் மாநகராட்சி கெடுபிடி காட்டுவதால், காலி மனைகளை கணக்கெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த வார்டு கவுன்சிலர் மற்றும் வரி தண்டலர்களிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 உடன் கணக்கெடுப்பு முடிந்து, அதன் பிறகு, பொட்டல் வரி விதிப்பில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட உள்ளது.

Last Updated on Tuesday, 02 March 2010 06:31
 

வரி விதிக்கப்படாமல் ஆயிரக்கணக்கான வீடுகள் : ஆய்வு செய்ய நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர் 01.03.2010

வரி விதிக்கப்படாமல் ஆயிரக்கணக்கான வீடுகள் : ஆய்வு செய்ய நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு வரி விதிக்காமல் இருப்பதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். பொள்ளாச்சி நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;

மணி (காங்.,): வீடு கட்டி முடித்து ஐந்து ஆண்டுகளாகியும் அந்த வீட்டுக்கு வீட்டு வரி விதிக்கப்படாமல் உள்ளது. இதேபோல், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு வரி விதிக்காததால் வருவாய் இழப்புஏற்படுகிறது.

முரளிதரன் (.தி.மு..,): வரி விதிக்காத வீடுகளை ஆய்வு செய்து வரி விதிக்க வேண்டும்.
வரதராஜ் (கமிஷனர்): வரி வசூல் பணி முடிந்ததும், வரி விதிக்கப்படாத குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து வரி விதிக்கப்படும்.

ஜேம்ஸ்ராஜா (.தி.மு..,): அரசியல் கட்சிகளின் பேனர் நகரம் முழுவதும் ஆக்கிரமித்திருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறும், விபத்தும் ஏற்படுகிறது.

வரதராஜன் (டி.பி..,): அரசியல் கட்சி பிளக்ஸ் பேனர்களை அகற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒரு சில கட்சியினர் கலந்து கொள்ளாததால் முடிவு எடுக்கவில்லை. இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தி உறுதியான முடிவு எடுக்கப்படும்.

முரளிதரன்: திரு.வி.., மார்க்கெட் ரோட்டில் நடைபாதை கடைகள் அகற்றப் பட்ட பிறகும், முளைத்தள்ளன.

மணி: மார்க்கெட் ரோட்டில் தள்ளுவண்டி, நடைபாதை கடைகள் மீண்டும் முளைத்தால் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

டி.பி..,: தள்ளுவண்டி, நடைபாதை கடைக்காரர்களுக்கு மாற்று இடம் கொடுப்பது பற்றி ஆலோசனை செய்யப்படுகிறது.
கிருஷ்ணகுமார் (துணைத்தலைவர்): நகரமைப்பு பிரிவில் இருந்து வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், பெண் ஊழியர்களை கேவலமாக திட்டுவதாகவும், பாலியல் ரீதியாக விமர்சிப்பதாகவும் புகார் வந்துள்ளது.

கவுதமன் (தி.மு..,): பெண் ஊழியர்கள் இது தொடர்பாக கமிஷனரை சந்தித்து புகார் செய்துள்ளனர். பெண்களுக்கு இடையூறு செய்யும் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்: பெண் ஊழியர்களை தொந்தரவு செய்பவரை மாற்றம் செய்ய வேண்டும்.

கமிஷனர்: எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முரளிதரன்: நகராட்சி பெண்கள் பள்ளியின் பழைய இடம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படுகிறதா, அல்லது வணிக வளாகம் கட்டப்படுகிறதா?

டி.பி..,: அரசு தான் இந்த பிரச்னையில் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு, கவுன்சில் கூட்டத்தில் விவாதம் நடந்தது.

Last Updated on Monday, 01 March 2010 06:02
 

குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்த கால நீட்டிப்பு

Print PDF

தினமலர் 01.03.2010

குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்த கால நீட்டிப்பு

சென்னை :குடிநீர் மற்றும் கழிவு நீர் வரியை செலுத்த, வரும் மார்ச் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய் யப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:இரண்டாம் அரை ஆண்டான 2009- 10ன் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியையும், குடிநீர் கட்டணங்களையும் செலுத்த கடைசி நாள் வரும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப் பட்ட தேதிக்கு பின் தாமதமாக செலுத்தினால் மேல் வரி விதிக்கப்படும்.சென்னை குடிநீர் வாரியத்தின் வசூல் மையங்கள் சனிக்கிழமை உட்பட அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். வரும் மார்ச் 21 மற்றும் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும். குடிநீர், கழிவு நீர் வரி மற்றும் கட்டணங்கள் மீது ஏதேனும் விளக்கங்கள் தேவை எனில், அவர்களுக்குரிய சென்னைக் குடிநீர் வாரிய அலுவலகங்களை அணுகலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Last Updated on Monday, 01 March 2010 05:56
 


Page 107 of 148