Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நகராட்சி வரிகளை ஐடிபிஐ வங்கியில் செலுத்தலாம்

Print PDF

தினமணி 20.02.2010

நகராட்சி வரிகளை ஐடிபிஐ வங்கியில் செலுத்தலாம்

கரூர், பிப். 19: கரூர் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரிகளை ஐடிபிஐ வங்கியில் செலுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் நகராட்சியில் வரி வசூல் மையம் இயங்கி வருகிறது. மேலும், நடமாடும் வரி வசூல் சேவை மைய வாகனமும் இயக்கப்படுகிறது. கரூரிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளிலும் வரிகளைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரூர் 80 அடிச் சாலையிலுள்ள தொழில் வளர்ச்சி வங்கி (ஐடிபிஐ) வங்கியில் பணம் செலுத்தும் வசதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தச் சேவையை கரூர் நகராட்சித் தலைவர் பி. சிவகாமசுந்தரி குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்தார்.

நகராட்சி ஆணையர் (பொ) சி. ராஜா, கவுன்சிலர் மாரப்பன், நகர் நல அலுவலர் கே. சந்தோஷ்குமார், வங்கி மேலாளர் கே. சக்தி, நகராட்சி மேலாளர் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் ஜெ. மாத்யு ஜோசப், வங்கி ஊழியர்கள் எஸ். ராஜு, அஞ்சலி, எஸ். சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 20 February 2010 10:36
 

ஆற்காட்டில் வரிவசூல் தீவிரம்

Print PDF

தினமலர் 20.02.2010

ஆற்காட்டில் வரிவசூல் தீவிரம்

ஆற்காடு: ஆற்காடு நகரில் நகராட்சி மூலம் டாம்டாம் அடித்து வரி வசூல் செய்கின்றனர்.2009- 10ம் ஆண்டிற்கான நகராட்சி குழாய்வரி, கடை வரி, வீட்டு வரி, தொழில் வரி ஆகிய நிலுவையில் உள்ள வரிபாக்கிகளை ஆற்காடு நகராட்சி ஆணையர் பாரிஜாதம், பொறியாளர் மணி, வருவாய் ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர் மனோகரன், துப்புரவு ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் நகராட்சி சிப்பந்திகள் ஆற்காடு பஜார் பகுதியில் டாம்டாம் அடித்து வரிவசூலில் ஈடுபட்டனர். வரி செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் வைத்தனர். இந்த வரிவசூல் நடவடிக்கை நகரம் முழுவதும் நடைபெறும் என ஆணையர் பாரிஜாதம் தெரிவித்தார்

Last Updated on Saturday, 20 February 2010 06:51
 

சொத்துவரி செலுத்தாதவர்கள் வீடு,முன்பாக கொட்டு அடிக்க முடிவு :தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி

Print PDF

தினமலர் 20.02.2010

சொத்துவரி செலுத்தாதவர்கள் வீடு,முன்பாக கொட்டு அடிக்க முடிவு :தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி

தூத்துக்குடி;தூத்துக்குடியில் சொத்துவரி செலுத்தாதவர்கள் வீடு, வர்த்தக நிறுவனங்கள் முன்பாக கொட்டு அடிக்க மாநகராட்சி அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதற்காக 5 விசேஷ கொட்டுகள் மாநகராட்சிக்கு வாங்கப்படுவதாக கமிஷனர் தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பாக்கியுள்ள வரி இனங்களை வசூல் செய்யும் பணியில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

மார்ச் 31ம் தேதிக்குள் வரிகளை பெரும்பாலும் வசூல் செய்து விட வேண்டும் என்பதில் மாநகராட்சி களம் இறங்கியுள்ளது. இது குறித்து மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் கூறியதாவது;தூத்துக்குடி மாநகராட்சிக்குரிய புதிய அலுவலக கட்டடம் 4 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. பக்கிள் ஓடை இரண்டாம் கட்ட சீரமைப்பு பணி, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு அரசிடம் இருந்து மானியம் மற்றும் கடன் பெறப்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சியின் பங்கு தொகை செலுத்த வேண்டும்.

ஆனால் மாநகராட்சி பகுதியில் சொத்துவரி உள்ளிட்ட வரி இனங்கள் மூலம் சுமார் 8 கோடி ரூபாயிற்கு வரிபாக்கி உள்ளது. இதனை முழுமையாக வசூல் செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை செய்யப்பட்டவுடன் 80 லட்ச ரூபாய் வரி வசூல் ஆகியிருக்கிறது. ஆனால் மார்ச் 15ம் தேதிக்குள் இதனை முழுமையாக வசூல் செய்ய அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சொத்துவரி பாக்கி வைத்துள்ள வணிக நிறுவனங்கள், வீடுகள் முன்பாக மாநகராட்சி பணியாளர்கள் சென்று கொட்டு அடிப்பர். வீடு, கடை முன்பு கொட்டு அடிக்கும் போது அதனை பலர் பார்ப்பர்.

கொட்டு அடிக்கும் நபர் சொத்துவரியை செலுத்துங்கள் என்று கூறி சிறிது நேரம் அங்கு தொடர்ந்து கொட்டடிப்பர். இதுபோன்ற நூதன நடவடிக்கை எடுக்கும் போது தானாக வரியை செலுத்தி விடுவார்கள் என்பதால் இதுபோன்ற புதிய முறையை அமல்படுத்த உள்ளோம். இதற்காக விசேஷமான 5 கொட்டு மாநகராட்சிக்கு வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரிரு நாளில் கொட்டு வந்துவிடும்.

அதன் பிறகு வரி பாக்கியுள்ள வீடு, வணிக நிறுவனங்கள் முன்பாக கொட்டு சத்தம் கேட்கும். மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, மின் கட்டணம், வளர்ச்சி திட்டம் போன்றவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதால் வரிகள் பாக்கி இருக்கும் போது இதனை நிறைவேற்ற கடுமையான சிரமம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பணிகள் தொய்வில்லாமல் நடக்க மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக மக்கள் செலுத்த வேண்டும். மேல் நடவடிக்கைக்கு வழி வகுக்காமல் மாநகராட்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு குபேந்திரன் தெரிவித்தார்.

மாநகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் உடனிருந்தார். தூத்துக்குடி மாநகராட்சி வரலாற்றில் சொத்துவரி வசூலுக்காக வீடுகள், கடைகள் முன்பாக கொட்டு அடித்து வசூல் செய்யும் நூதன முறையை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது புதிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி இருக்கிறது.

Last Updated on Saturday, 20 February 2010 06:46
 


Page 109 of 148