Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

சிவகாசி நகராட்சியில் சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை

Print PDF

தினமலர் 18.02.2010

சிவகாசி நகராட்சியில் சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை

சிவகாசி:சிவகாசி நகராட்சி ஆணையாளர் விஜயராகவன் அறிவிப்பு:சிவகாசி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 2007-2008, 2008 - 2009ம் ஆண்டுகளில் 100 சதவீத சொத்து வரி வசூல் செய்து மாநிலத்திலேயே முதல் வரி வசூல் செய்த நகராட்சி என சாதனை படைத்தது. இதே போன்று நடப்பு ஆண்டில் 100 சதவீதம் சொத்து வரியை வசூல் செய்து முடிவெடுத்து ஊழியர்கள் முடுக்கி விடப்பட்டுள் ளனர்.சொத்து வரி மூலம் சிவகாசி நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.5.41 கோடி வருவாய் கிடைக்கும். நடப்பு ஆண்டில் 2, 16,17 ஆகிய மூன்று வார்டுகள் மட்டுமே 100 சதவீத வரிவசூல் செய்துள்ளது. மீதியுள்ள 30 வார்டுகளிலும் சொத்து வரியினை பிப்.28ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வரி செலுத்த தவறினால் சொத்தின் உரிமையாளர் வீட்டு முன்பு தண்டோரா போட்டும், ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு வரி வசூலிக்கப்படும். எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக வரி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Last Updated on Thursday, 18 February 2010 07:26
 

நூறு சதவீதம் வரிவசூலித்து போடி நகராட்சியினர் சாதனை

Print PDF

தினமலர் 18.02.2010

நூறு சதவீதம் வரிவசூலித்து போடி நகராட்சியினர் சாதனை

போடி:போடியில் சொத்து வரியாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்து போடி நகராட்சி நிர்வாகம் நூறு சதவீதமாக சாதனை படைத்துள்ளது.போடியில் வீட்டுவரி, லாட்ஜ், கடை வரி உட்பட பல்வேறு வகையில் கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் வரி உயர்த்தியது. தெருக்களில் வளர்ச்சிப்பணிகள் செய்வதிலும் நிர்வாகத்தினர், சுணக்கம் காட்டியதால் வரி வசூல் செய்வதில் தொய்வு ஏற்பட்டது.

இந்த ஆண்டு வளர்ச்சிப்பணிகள் மட்டுமின்றி நகரில் சுகாதாரத்தை பேணுவதிலும், நகராட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு நகராட்சி நிர்வாகம் மார்ச் மாத இறுதியில் 96 சதவீதம் வரிவசூல் செய்திருந்தது. இந்த ஆண்டு மற்ற நகராட்சி நிர்வாகங்களை காட்டிலும், இந் நகராட்சி நிர்வாகம் பிப். ,15 ம் தேதிக்குள் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து வரியாக நூறு சதவீதம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக, நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,"" போடி நகராட்சி பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் 96 சதவீதம் மட்டுமே வரி வசூல் செய்ய முடிந்தது. இந்த ஆண்டு நகரில் வளர்ச்சிப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது, மட்டுமின்றி பணியாளர்களின் ஒத்துழைப்பால் வசூல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வரும் ஆண்டில் நகராட்சி பகுதியில் வளர்ச்சிப்பணிகள் தீவிரப்படுத்தப்படும்'' என்றார

Last Updated on Thursday, 18 February 2010 07:17
 

வரி ஏய்ப்பு: குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 17.02.2010

வரி ஏய்ப்பு: குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், பிப்.16: 3 ஆண்டுகளுக்கு மேலாக வரி ஏய்ப்பு செய்து வந்த வீடுகளின் குடிநீர் இணைப்பை 15வேலம்பாளையம் நகராட்சி நிóர்வாகம் துண்டிப்பு செய்தது. தொடர்ந்து இதேபோல் வரிஏய்ப்பு செய்து வரும் வீடுகளை கணக்கெடுத்து குடிநீர் இணைப்புகளை துண்டிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூரை அடுத்த 15வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை 3 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள குடியிருப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நகராட்சிக்கு உட்பட்ட 1, 5 மற்றும் 6வது வார்டுகளில் 11 வீடுகளில் 3 ஆண்டுகளுக்கு மேலாக வரி பாக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவ் வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க நகராட்சி செயல்அலுவலர் குற்றாலிங்கம் உத்தரவிட்டார்.

இதையடுத்து அவ் வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நகராட்சி பொறியாளர் மல்லிகை தலைமையில் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்குள் தங்கள் வரிபாக்கி முழுவதையும் உடனடியாக செலுத்தி விடுவதாக 9 வீட்டு உரிமையாளர்கள் அளித்த உறுதியை ஏற்று அவ்வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது. இருப்பினும், எவ்வித பதிலும் தெரிவிக்காத சாஸ்திரி வீதியைச் சேர்ந்த 2 வீடுகளின் குடிநீர் இணைப்புகளும் அதிகாரிகளின் முன்னிலையில் துண்டிக்கப்பட்டன.

தொடர்ந்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மார்ச் மாதத்துக்கு பிறகு வரிஏய்ப்பு செய்வோர் வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று நகராட்சி பொறியாளர் மல்லிகை தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 17 February 2010 09:02
 


Page 111 of 148