Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நல்லூர் நகராட்சியில் வரிவசூல் தீவிரம்: 25க்குள் குடிநீர் கட்டணம் செலுத்த கெடு

Print PDF

தினமணி 17.02.2010

நல்லூர் நகராட்சியில் வரிவசூல் தீவிரம்: 25க்குள் குடிநீர் கட்டணம் செலுத்த கெடு

திருப்பூர், பிப்.16: நல்லூர் நகராட்சியில் வரிவசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து பிப்.25ம் தேதிக்குள் குடிநீர் கட்டணம் செலுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

திருப்பூரை அடுத்த நல்லூர் நகராட்சியில் 2009-10ம் நிதியாண்டுக்கான வரிவசூல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் கணக்கிடப்பட்ட ரூ.1.80 கோடி சொத்துவரியில் இதுவரை ரூ.1.17 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.51 லட்சம் குடிநீர் கட்டணத்தில் இதுவரை ரூ.27 லட்சமும், ரூ.11 லட்சம் தொழில் வரியில் இதுவரை ரூ.5 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 56 சதவீதம் வசூலா கியுள்ளது.

இந்நிலையில், முழுமையாக வரி வசூல் செய்ய இன்னும் ஒருமாதமே உள்ளதால் இந் நகராட்சியில் வரிவசூலிக்கும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் குடிநீர் கட்டணத்தை பிப்.25ம் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தவறும்பட்சத்தில் முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பை துண்டிக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே, நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் விரைவில் தங்கள் வரித்தொகைகளை செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்று நகராட்சி தலைவர் ஜி.விஜயலட்சுமி, செயல்அலுவலர் சண்முகம் தெரிவித்துள்ளனர்.

Last Updated on Wednesday, 17 February 2010 08:59
 

குளித்தலை: நகராட்சி சொத்து வரியை செலுத்த அறிவுறுத்தல்

Print PDF

தினமணி 17.02.2010

குளித்தலை: நகராட்சி சொத்து வரியை செலுத்த அறிவுறுத்தல்

குளித்தலை, பிப். 16: குளித்தலை நகராட்சி சொத்து வரிகளைச் செலுத்த நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் கு. தனலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குளித்தலை நகராட்சிக்கு உள்பட்ட பொதுமக்கள் 2009-10-ம் ஆண்டிற்கு தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி, நகராட்சி கடைகளின் வாடகை, தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி உடனடியாகச் செலுத்த வேண்டும்.

தவறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கைகளான குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

Last Updated on Wednesday, 17 February 2010 08:54
 

முறையாக வரி செலுத்த வேண்டியது அவசியம் மத்திய இணை அமைச்சர் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 17.02.2010

முறையாக வரி செலுத்த வேண்டியது அவசியம் மத்திய இணை அமைச்சர் வேண்டுகோள்

ஓசூர்:""வரி செலுத்துவோர் முறையாக வரி செலுத்தினால் மட்டுமே அரசு திட்டங்கள் ஏழைகளுக்கான திட்டங்கள் நிறைவு பெறும்,'' என, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் தெரிவித்தார். ஓசூர் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய வருமானவரித்துறை அலுவலகம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது: நாடு முழுவதும் நிறைய அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. படிபடியாக அவற்றுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வாடகை கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ள ஓசூர் அலுவலகத்துக்கும் விரைவில் மூன்று ஏக்கரில் சொந்த அலுவலகம் திறக்கப்படும்.வருமானவரித்துறை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் மிக பெரிய தொகை வருமானம் கிடைத்து வருகிறது. 2008ம் ஆண்டு 2 லட்சத்து 76 ஆயிரத்து 450 கோடி ரூபாயும், 2009ல் 2 லட்சத்து 59 ஆயிரத்து 661 கோடி ரூபாயும், 2010 ஜனவரி வரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 698 கோடி ரூபாயும் அரசுக்கு வருமானமாக கிடைத்துள்ளது.

இந்த நிதியாண்டில் இன்னும் இரு மாதங்கள் உள்ளன. இதனால், கடந்த ஆண்டுகளை காட்டிலும் வருமானவரித்துறை மூலம் அதிகளவு அரசுக்கு அதிகளவு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, நடப்பாண்டு வருமான வரித்துறையில் 6.59 சதம் கூடுதாலாக வரி வசூலாகி உள்ளது. சென்னையை பொறுத்த வரை 10.47 சதம் கூடுதலாக வரிவசூலாகி உள்ளது. வரி வசூல் மூலமே நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியும். வரி செலுத்துவோர் வரியை ஒழுங்காக செலுத்தினால், ஏழை, எளிய மக்களுக்காக தீட்டப்படும் அரசு திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியும். பொருளாதார வீழ்ச்சியால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தியாவில் முதலீடு செய்தால் முதலீடுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற நம்பிக்கை முதலாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றனர். கடன் வழங்கவும் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

பொதுவாக சொந்த அரசு அலுவலக கட்டிட திறப்பு விழாக்கள் தான் அமைச்சர்களை அழைத்து விமர்ச்சையாக நடத்தப்படுவது வழக்கம். நேற்று வருமான வரித்துறை வாடகை கட்டிட திறப்பு விழா அமைச்சரை அழைத்து விமர்சையாக திறப்பு விழா நடந்தது. வாடகை கட்டிட திறப்பு விழாவுக்கு அமைச்சரை அழைத்து விமர்ச்சையாக விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

விழா முடியும் முன் சென்ற கலெக்டர் விழா அழைப்பிதழிலில் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், எம்.பி., சுகவனம் பெயர் மற்றும் துறை அதிகாரிகள் பெயர் மட்டும் இடம்பெற்று இருந்தது. கலெக்டர் சண்முகம், உள்ளூர் எம்.எல்.., கோபிநாத் ஆகியோர் பெயர் இடம்பெறவில்லை. எம்.எல்.., கோபிநாத் விழாவுக்கு வரவில்லை. கடைசி வரை கலெக்டரை விழாவுக்கு அழைக்க வில்லை. நேற்று காலை அமைச்சரின் கட்டாய அழைப்பின் பேரில் கலெக்டர் சண்முகம் பங்கேற்றார். அவர் விழாவில் பேசும்போது, ""விழாவுக்கு அழைப்பு இல்லை; அழையாத விருந்தாளியாக வந்துள்ளேன். அடுத்த முறை சொந்த கட்டிட திறப்பு விழாவுக்கு அழைப்பார்களோ; இல்லையோ?, அழைத்தால் வருவோம்,'' என, விரக்தியுடன் பேசினார். பேசி முடித்தவுடன் உடனடியாக விழா அரங்கை விட்டு கோபத்துடன் வெளியேறினார். இதனால், விழா அரங்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Wednesday, 17 February 2010 05:26
 


Page 112 of 148