Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வீட்டுவரி, குடிநீர் வரி செலுத்த ஈரோடு கலெக்டர் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 15.02.2010

வீட்டுவரி, குடிநீர் வரி செலுத்த ஈரோடு கலெக்டர் வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு மாவட்ட பஞ்சாயத்துகளில் வசிப்போர் இதுவரை வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி செலுத்தவில்லை என்றால், வரும் 28ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கலெக்டர் சுடலைகண்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:ரோடு மாவட்டத்துக்குட்பட்ட பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் 2009-10ம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி ஆகியவற்றை பஞ்சாயத்துக்கு செலுத்திட அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 10 மாதம் கடந்துவிட்ட நிலையில், இதுவரை பஞ்சாயத்துக்கு வரி செலுத்தாதவர்கள் பிப்ரவரி 28ம் தேதிக்குள் பஞ்சாயத்து அலுவலகத்தில் நிலுவையின்றி செலுத்திட வேண்டும்.

வரிகளை செலுத்த தவறும் பட்சத்தில் 1994ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்பிரிவு, 172,174 மற்றும் உட்பிரிவுகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும். வரி செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு அரசு ஆணை 260 ஊரக வளர்ச்சித் துறையின்படி முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும். துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்கப்படமாட்டாது. எனவே, உரிமையாளர்கள் தங்களது வரிகளை பஞ்சாயத்து அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Last Updated on Monday, 15 February 2010 07:31
 

வரி பாக்கி: வணிக நிறுவனங்களுக்குஅருப்புக்கோட்டை நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர் 15.02.2010

வரி பாக்கி: வணிக நிறுவனங்களுக்குஅருப்புக்கோட்டை நகராட்சி எச்சரிக்கை

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவபிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சிக்குசெலுத்த வேண்டிய குடிநீர்கட்டணம், சொத்து வரி மற்றும் பிற வரிகளை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் செலுத்த வேண்டும். குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப் படுவதுடன் அவர்களுக்கு மீண்டும் இணைப்பு வழங்கப்பட மாட்டாது. மேலும், வரி பாக்கி வைத்திருக்கும் தொழில் நிறுவனங்கள் தாங்கள் பாக்கிகளை செலுத்தாத பட்சத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் வரி பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியல் வழங்கப்பட்டு அவர்களின் "லைசென்ஸ்' புதுப் பித்தலை நிறுத்தி வைக்கும் படி பரிந்துரை செய்யப்படும். என்றார்.

Last Updated on Monday, 15 February 2010 07:23
 

வரி கட்ட தவறினால் குடிநீர் 'கட்'

Print PDF

தினமலர் 15.02.2010

வரி கட்ட தவறினால் குடிநீர் 'கட்'

திருத்தணி :"நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங் களை கட்ட தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக் கப்படும்' என நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வீடு மற்றும் கடைகளுக்கு வரி பாக்கி அதிகளவில் நிலுவையில் உள்ளன. வரி பாக்கியை உடனடியாக வசூலிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப் பித்தது.இதையடுத்து, திருத்தணி நகராட்சியில் செலுத்த வேண்டிய வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை இனங்கள், உரிமக் கட்டணம் மற் றும் இதர வகை வரி பாக்கியை வரும் 28ம் தேதிக் குள் செலுத்த வேண்டும்.

கட்ட தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.மேலும், ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் ஆட்டோவின் மூலம் வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய் வதுடன் துண்டு பிரசுரமும் கொடுத்து வருகிறது. வரி செலுத்தும்பொதுமக்களின் வசதிக்காக திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப் பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் நகராட்சிக்கு ஒத்துழைத்து வரி செலுத்த வேண் டும்.இவ்வாறு நகராட்சி ஆணையர் செண்பகராஜன் தெரிவித்தார். அப்போது திருத்தணி நகரமன்ற தலைவர் பாமாசந்திரன் உடனிருந்தார்.

Last Updated on Monday, 15 February 2010 06:39
 


Page 115 of 148