Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

மாநகராட்சி விதிக்கு புறம்பாக வரி விதிப்பு?

Print PDF

தினமலர் 14.02.2010

மாநகராட்சி விதிக்கு புறம்பாக வரி விதிப்பு?

கோவை : காலியிட வரி செலுத்தாமல் தவிர்ப்பதற்காக, கட்டடம் கட்டி முடிப்பதற்கு முன்பே, விதிகளை மீறி வரி விதிப்பு மற்றும் குடிநீர் இணைப்பு கொடுத்திருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.நிதியாண்டு முடியும் தருவாயில் இருப்பதால், கோவை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் புதிய வரி விதிப்பு, வரி பாக்கி சூல் போன்ற பணிகள் தீவிரமடைந்துள்ளன.இந்நிலையில், கோவை கிழக்கு மண்டலத்தில், கட்டி முடிக்கப்படாத அடுக்கு மாடி கட்டடத்திற்கு வரி விதிப்பு செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பும் தரப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட விவேகானந்தா நகரில் ஏழு சென்ட் காலி இடத்தில் 2 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு, கிழக்கு மண்டலத்தில் கட்டட வரைபட அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த கட்டடம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால், டிச.2009லேயே வரி விதிப்பு செய்யப்பட்டு, 10 நாட்களுக்கு முன்பாக குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் கட்டி முடிக்காத இந்த கட்டடத்துக்கு 2007-08லிருந்தே வரி விதிப்பு (அசெஸ்மென்ட் எண்;17076) செய்யப்பட்டு இருப்பது கூடுதல் செய்தி. இரு தளத்துக்கும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாய் வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை புதுப்பித்துக் கட்டினாலும், குடிநீர் இணைப்பை மாநகராட்சி வசம் ஒப்படைத்து விட்டே, கட்டடப் பணியைத் துவக்க வேண்டுமென்கிறது மாநகராட்சி விதி. புதிய கட்டடமாக இருந்தாலும் கட்டி முடித்த பின்பே, குடிநீர்க் குழாய் இணைப்பு தரப்படும். ஆனால், இந்த கட்டடத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாக ஒன்றுக்கு இரண்டாக குடிநீர்க் குழாய் இணைப்பு தரப்பட்டு, அந்த தண்ணீரையே கட்டுமானப் பணிக்கும் பயன்படுத்துவதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதே கிழக்கு மண்டலத்தில், கட்டி முடித்து பல மாதங்களான பல கட்டடங்களுக்கு வரி விதிப்பு செய்யப்படவில்லை. குடிநீர் இணைப்புக்கு பலர், பல மாதங்களாகக் காத்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாடும் தலை விரித்தாடுகிறது. கிழக்கு மண்டல உதவி கமிஷனர் (பொறுப்பு) லோகநாதனிடம் கேட்ட போது, ""அப்படி நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் என் மீது, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் கொடுக்கலாம். நீங்கள் குறிப்பிடுவதைப் போல மாநகராட்சி விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை அலுவலக கோப்புகளை சரி பார்த்து அதன் பின்பே சொல்லமுடியும். இதற்கெல்லாம் உடனடியாக பதில் தர முடியாது,'' என்றார்.

 

கோவை மாநகராட்சியில் கூடுதலாக 2 வரி வசூல் மையங்கள் துவக்கம்

Print PDF

தினமணி 12.02.2010

கோவை மாநகராட்சியில் கூடுதலாக 2 வரி வசூல் மையங்கள் துவக்கம்

கோவை, பிப்.11: கோவை மாநகராட்சியில் கூடுதலாக 2 வரி வசூல் மையங்கள் வியாழக்கிழமை துவக்கப்பட்டது. கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 11}வது வார்டு வரதராஜபுரம் திருமண மண்டபம், 6}வது வார்டு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் புதிய மையங்கள் மேயர் ஆர்.வெங்கடாசலம் துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா தலைமை வகித்தார். துணை மேயர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். இப் புதிய மையங்களுடன் சேர்த்தால், மாநகராட்சியில் மொத்தம் 16 வரி வசூல் மையங்கள் உள்ளன. வடக்கு மண்டலத்தில் மேலும் இரு மையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் சொத்துவரி ரூ.64 கோடி வசூலிக்கப்பட வேண்டும். இதுதவிர குடிநீர் கட்டணம், தொழில்வரி, உரிமக் கட்டணம் உள்ளிட்டவையும் இம் மையங்களில் வசூலிக்கப்படும். பொதுமக்களுக்கு கூடுதல் வசதியை அளிக்கும் வகையில் பிரதான அலுவலகம், மண்டல அலுவலகங்கள், சாயிபாபா காலனி, சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் வரி வசூல் மையங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கி வருகின்றன.

சொத்துவரியை அக்.15}ம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், பொதுமக்கள் பலர் மார்ச் 31}ம் தேதி வரை காத்திருந்து செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்களது சொத்துவரி மற்றும் பிற வரிகளை உடனடியாகச் செலுத்த வேண்டும் என ஆணையர் அன்சுல் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு மண்டலத் தலைவர் எஸ்.எம்.சாமி, ஆளும் கட்சித் தலைவர் ஆர்.எஸ்.திருமுகம், 11}வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 February 2010 11:22
 

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் துண்டிப்பு மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமணி 12.02.2010

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் துண்டிப்பு மாநகராட்சி எச்சரிக்கை

ஈரோடு, பிப்.11: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று ஆணையர் பி.பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: ÷ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர்க் கட்டணம், குத்தகை இனங்கள், உரிமக் கட்டணங்கள் மற்றும் இதர வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும்.

வரி நிலுவைகளை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் நலன் கருதி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வரி செலுத்த மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Last Updated on Friday, 12 February 2010 11:07
 


Page 116 of 148