Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வாணியம்பாடியில் வரிவசூல் தீவிரம்

Print PDF

தினமலர் 12.02.2010

வாணியம்பாடியில் வரிவசூல் தீவிரம்

வாணியம்பாடி : வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வரிவசூல் முகாம் நடந்து வருகிறது.வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் ஆகியவைகளை நிலுவையில் உள்ளதையும் நடப்பு ஆண்டின் வரியையும் வசூலிக்க தீவிர வரிவசூல் முகாம் நடந்து வருகிறது. கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் இன்ஜினியர் இளஞ்செழியன், நகரமைப்பு அலுவலர் நமச்சிவாயம், முரளி, குருசீனிவாசன், துப்புரவு ஆய்வாளர்கள் ராஜேந்திரன் சீனிவாசன், ஜான்சன், நடராஜன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் தீவிர வரிவசூல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், வீட்டு வரி ஆகியவற்றை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, ஜப்தி போன்ற நடவடிக்கைளை தவிர்க்குமாறு கமிஷனர் ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Last Updated on Friday, 12 February 2010 07:45
 

வரி கட்டாவிடில் குடிநீர் துண்டிப்பு மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

தினமலர் 12.02.2010

வரி கட்டாவிடில் குடிநீர் துண்டிப்பு மாநகராட்சி அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி கட்ட தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சிக்கு 2009-10ல் செலுத்த வேண்டிய வீட்டுவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், உரிமக் கட்டணங்கள் மற்றும் இதர வரியினங்களை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதுடன், ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் அலுவலகத்தில் பணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Friday, 12 February 2010 07:16
 

காரைக்குடி நகராட்சிக்கு ரூ.6.80 கோடி வரி பாக்கி: பிப்.15 முதல் 28 வரை தீவிர வசூல் முகாம்

Print PDF

தினமணி 10.02.2010

காரைக்குடி நகராட்சிக்கு ரூ.6.80 கோடி வரி பாக்கி: பிப்.15 முதல் 28 வரை தீவிர வசூல் முகாம்

காரைக்குடி, பிப். 9: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் ரூ. 6.80 கோடிக்கு நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்காக, வரும் 15 முதல் 28-ம் தேதி வரை தீவிர வசூல் முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து, நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சொத்து வரி நிலுவை ரூ. 4.93 கோடி, தண்ணீர் கட்டணம் ரூ. 52.70 லட்சம் தொழில் வரி நிலுவை ரூ. 95 லட்சம், குத்தகை இனங்கள் ரூ. 39 லட்சம் என மொத்தம் 6.80 கோடி வரி பாக்கிகள் வசூலிக்கப்பட வேண்டியுள்ளது.

இவற்றை துரிதமாக வசூல் செய்யும் பொருட்டு, காரைக்குடி நகராட்சி வரும் 15 முதல் 28-ம் தேதி வரையிலான நாள்களை தீவிர வசூல் முகாம் நாள்களாக அறிவித்துள்ளது.

இந்த நாள்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நகராட்சி அலுவலகக் கணினி மையம் இயங்கும். மேலும், வரி நிலுவைகளை வசூலிக்க மேலாளர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, பொது மக்கள் தீவிர வசூல் முகாம் தேதிகளில் வரிகளை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

Last Updated on Wednesday, 10 February 2010 11:16
 


Page 117 of 148