Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

காரைக்குடியில் வரி வசூல் முகாம் நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினமலர் 10.02.2010

காரைக்குடியில் வரி வசூல் முகாம் நகராட்சி தலைவர் தகவல்

காரைக்குடி: "நிலுவையில் உள்ள ஆறு கோடி ரூபாய் வரியை வசூலிக்க, நான்கு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. வரும் 15 ம் தேதி தீவிர வரி வசூல் முகாம் துவங்கும்,' என காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை, கமிஷனர் ரவிச்சந்திரன் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி 4.53 லட்சம், குடிநீர் வரி 56 லட்சம், தொழில் வரி 60 லட்சம், கடை வாடகை 16 லட்சம் என வரி நிலுவையில் உள்ளது. தீவிர வரி வசூல் மூலம் கடந்த ஆண்டு ஐந்து கோடி வசூலிக்கப்பட்டது. இவ் வாண்டு நிலுவை வரி வசூலிக்க, வரும் 15 முதல் 28 ம் தேதி வரை முகாம் நடக்கிறது.

இதற்கு நான்கு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. விடுமுறையிலும் முகாம் நடக்கும்.போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பிடிபடும் மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். பராமரிப்பு செலவும் வசூலிக்கப்படும் என்றனர்.

Last Updated on Wednesday, 10 February 2010 10:16
 

78 லட்சம் வரி வசூல்

Print PDF
தினமலர் 09.02.2010

78 லட்சம் வரி வசூல்

மதுரை:மாநகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது வரி வசூலில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.வருவாய் உதவி கமிஷனர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் நேற்று இன்ஜினியர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், நான்கு மண்டலங்களிலும் வரி வசூலில் ஈடுபட்டனர். ஒரே நாளில் 78 லட்சம் ரூபாய் வசூலானது. மார்ச் வரை தீவிர வரி வசூல் நடக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Tuesday, 09 February 2010 09:10
 

வரி செலுத்த வேண்டுகோள்

Print PDF

தினமலர் 08.02.2010

வரி செலுத்த வேண்டுகோள்

திருப்பூர் : "திருப்பூர், 15 வேலம் பாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை, பிப்., 15க்குள் செலுத்த வேண்டும்' என நகராட்சி செயல் அலுவலர் குற்றாலிங்கம் தெரிவித் துள்ளார்

.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர், 15 வேலம் பாளையம் நகராட்சியில் 2009-10ம் ஆண்டுக்கான வரி வசூல் நடந்து வருகிறது. ஒவ்வொரு நிதியாண்டுக்கு இரண்டு முறை சொத்து மற்றும் தொழில் வரிகளும், ஆண்டுக்கு நான்கு முறை குடிநீர் கட்டணம் வசூலிக் கப்படுகிறது. மார்ச் மாதத் துக்குள் செலுத்த வேண்டிய வரியினங்களுக்கு, கால அவகாசமாக பிப்., 15ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள் ளது. அதற்குள் வரியினங் களை செலுத்த வேண்டும்.

நகராட்சியில் உள்ள ஒன்று முதல் 21 வார்டு மக்களுக்கும், இது பொருந் தும். குறிப்பிட்ட நாட் களுக்கு வரியினங்களை செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்துள்ளார்.

Last Updated on Monday, 08 February 2010 06:16
 


Page 118 of 148