Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

சொத்து வரி செலுத்த 'கெடு' ஆனைமலையில் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 05.02.2010

சொத்து வரி செலுத்த 'கெடு' ஆனைமலையில் எச்சரிக்கை

பொள்ளாச்சி:ஆனைமலை, ஒடையகுளத்தில் குடிநீர், சொத்து வரியை வரும் 15ம் தேதிக்குள் செலுத்தி தண்ணீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும்' என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைமலை, ஒடையகுளம் பேரூராட்சி நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை: பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை மேம்பாடு மற்றும் குடிநீர் வினியோகம் போன்ற திட்டங்களை சீராக பராமரித்து, செயல்படுத்த வரி மிகவும் அவசியமாக உள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, குத்தகைதாரர்களின் உரிம கட்டணம், கடைகளுக்கான லைசென்ஸ் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நிலுவையின்றி பொதுமக்கள் செலுத்த வேண்டும். பிப்., 15ம் தேதிக்குள் வரியை செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கவும் பொதுமக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 05 February 2010 06:36
 

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 04.02.2010

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

உடுமலை,பிப்.3: 2009-10 ம் ஆண்டு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என உடுமலை நகராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடுமலை நகராட்சி ஆணையாளர் அ.சுந்தராம்பாள் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், காலியிட வரி, தொழில் வரி, நகராட்சி கடை வாடகைகள், லைசென்ஸ் கட்டணங்கள் உள்ளிட்ட வரியினங்களை பிப்ரவரி மாத இறுதிக்குள் நகராட்சி கணினி மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரி இனங்களை செலுத்தாமல் இருந்தால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கடைகள் பூட்டி சீல் வைத்து நகராட்சி பொறுப்பில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், சொத்துவரி செலுத்தாத வீடுகளை பூட்டி சீல் வைத்தல், ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் வரி செலுத்தாத காலியிடங்களை நகராட்சி வசம் கை யகப்படுத்துதல் போன்ற சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே வரி இனங்களை உடனடியாக செலுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Last Updated on Thursday, 04 February 2010 11:05
 

வரி வசூல் முகாம்

Print PDF

தினகரன் 04.02.2010

வரி வசூல் முகாம்

குன்னூர்: குன்னூர் நகராட்சி ஆணையர் ராஜன், வெளியிட்டுள்ள அறிக்கை:

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 31ம் தேதி வரை தீவிர வரிவசூல் முகாம் நடைபெற உள்ளது. சனிக்கிழமை உள்ளிட்ட அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரியை செலுத்தலாம்.

நகராட்சி அலுவலக வசூல் மையம் மற்றும் சந்தை கண்காணிப்பாளர் வசூல் மையத்தில் வரி வசூலிக்கப்படும். பொது மக்கள் சொத்து, தொழில், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை நிலுவையின்றி பொது மக்கள், வியாபாரிகள் செலுத்தி ஒத்துழைக்க வேண்டும்

Last Updated on Thursday, 04 February 2010 07:42
 


Page 119 of 148