Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

ஹோட்டல் உணவு கையாள்பவர்கள் உரிமத்துக்கான கட்டணம் ரூ.250 ஆக குறைப்பு

Print PDF

தினமணி 29.01.2010

ஹோட்டல் உணவு கையாள்பவர்கள் உரிமத்துக்கான கட்டணம் ரூ.250 ஆக குறைப்பு

சென்னை, ஜன. 28: பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு வழங்கிட ஊக்கம் அளிக்கும் வகையில், ஹோட்டல்களில் உணவு கையாள்பவர்களுக்கான உரிமக் கட்டணத்தை ரூ. 500}லிருந்து ரூ. 250}ஆக மாநகராட்சி குறைத்துள்ளது.

இதற்கான தீர்மானம் மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் 57 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

இருந்தபோதும் தீர்மானங்கள் 19,47 ஆகியவற்றுக்கு கவுன்சிலர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். ஒப்பந்தப் பத்திரம் தொடர்பான தீர்மானம் 19}ல் ஏராளமான ஆங்கில எழுத்துப் பிழைகள் உள்ளன. இந்தப் பிழைகள், ஊழலுக்கு வழிவகுத்துவிடும் வாய்ப்பு உள்ளது என்று கவுன்சிலர் மங்கள்ராஜ் கூறினார்.

இதுபோல் பணிகளை ஒப்படைப்பது தொடர்பான தீர்மானம் 47 குறித்துப் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் சைதை ரவி, "பணியிடங்களை தீர ஆலோசிக்காமல் ஒப்படைப்பதால், பணி நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்றார். இதைத் தொடர்ந்து இந்த இரண்டு தீர்மானங்களிலும், கவுன்சிலர்களின் கருத்துகளுக்கு ஏற்ப திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

சுகாதார சீர்கேடின்றி, பொதுமக்களுக்கு உணவு வழங்கிட வழி வகுக்கும் வகையில் ஹோட்டல்களில் பணிபுரியும் உணவு கையாள்பவர்களுக்கு அளிக்கப்படும் உரிமத்துக்கான கட்டணத்தை ரூ. 500}லிருந்து ரூ. 250}ஆக குறைப்பது.

மாநகராட்சி மயானங்களில் சமூக விரோத செயல்களை தடுப்பதற்காக 38 மயானங்களில் முழு நேர காவலர்களை நியமிப்பது.

சென்னை மாநகராட்சியும், மலேசியாவில் உள்ள கோலாலம்பூரம மாநகராட்சியும் உணைந்து சகோதரத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள அரசின் அனுமதி பெறுவது உள்ளிட்ட 57 தீர்மானங்கள் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

 

குடிநீர் வரி செலுத்தாத 30 இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமணி 28.01.2010

குடிநீர் வரி செலுத்தாத 30 இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

மதுரை, ஜன. 27: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வரி செலுத்தாத 30 குடிநீர் இணைப்புகள் புதன்கிழமை துண்டிக்கப்பட்டன.

மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வரி ரூ.10 கோடி வரை நிலுவையில் உள்ளது. இதனை வசூலிக்கும் வகையில் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து, வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மதுரை கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட குயவர்பாளையம், அனுப்பானடி, கீரைத்துறை, கீழ்மதுரை காலனி உள்ளிட்ட பகுதிகளில் உதவி ஆணையர் (கிழக்கு) அங்கயற்கண்ணி, உதவிப் பொறியாளர்கள் காமராஜ், கனி, விஜயகுமார், மல்லிகா மற்றும் வரித் தண்டலர்கள் ஆய்வு செய்தனர். குடிநீர் வரி செலுத்தாத 30 இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 30}ல் இறைச்சி விற்பனைக்குத் தடை: மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி ஜனவரி 30}ம் தேதி மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி வதை செய்யும் இடங்களுக்கு விடுமுறை அவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பை மீறிச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 28 January 2010 09:59
 

ஓட்டல் கழிவுகளை எடுக்கும் கட்டணத்தை உயர்த்த முடிவு

Print PDF

தினமலர் 25.01.2010

ஓட்டல் கழிவுகளை எடுக்கும் கட்டணத்தை உயர்த்த முடிவு

திருப்பூர் : ஓட்டல், திருமண மண்டபங்கள், பேக்கரி; டீக்கடைகள், பழமுதிர் நிலையங்கள், இரவு நேர தள்ளுவண்டி உணவகங்களில் சேகரமாகும் கழிவை, குப்பை லாரிகள் மூலம் அகற்ற விதிக்கப் பட்டுள்ள கட்டணத்தை உயர்த்த, திருப்பூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் உட்பட லட்சக்கணக்கான தமிழர்கள் கோவை வர உள்ளனர். அங்கு வரும் தமிழர்கள், பனியன் நகரமான திருப்பூருக்கும் வர வாய்ப்பு உள்ளதால், இந்நகரை, தூய்மையாக்கும் பணியில் மாநகராட்சி கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், பேக்கரி; "டீ' ஸ்டால்கள், பழமுதிர் நிலையங்களில் தினமும் சேகரமாகும் கழிவுகளை வீதிகளில் கொட்டுவதற்கு தடை விதிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இக்கடைகளில் தினமும் சேகரமாகும் கழிவுகள், குப்பை லாரிகள் மூலம் அகற்றப்படுகின்றன; அதற்காக, கட்டணம் வசூலிக்கிறது மாநகராட்சி. அக்கட்டணத்தை, மாநகராட்சி நிர்வாகம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானம், வரும் 28ம் தேதி நடக்கு கவுன்சில் கூட்டத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

புதிய கட்டண விபரம்: (பழைய கட்டணம் அடைப் புக்குறிக்குள்). ஒரு வாரத்துக்கு "' வகுப்பு உணவு விடுதிகளுக்கு 300 ரூபாய் (ரூ.150); "பி' வகுப்பு உணவு விடுதிகளுக்கு 200 ரூபாய் (ரூ.100); "சி' வகுப்பு உணவு விடுதிகளுக்கு 150 ரூபாய் (ரூ.75); பழமுதிர் நிலையங்களுக்கு 200 ரூபாய் (ரூ.100); சிறிய பழமுதிர் நிலையங்களுக்கு 100 ரூபாய் (ரூ.50).
பேக்கரி, "டீ' ஸ்டால்களுக்கு ஒரு மாதத்துக்கு 300 ரூபாய் (ரூ.150); இரவு நேர தள்ளுவண்டி உணவு கடைகளுக்கு ஒரு வாரத்துக்கு 120 ரூபாய் (ரூ.60); "' வகுப்பு திருமண மண்டபங்களில் ஒரு நிகழ்ச்சிக்கு 800 ரூபாய்; "பி' வகுப்பு மண்டபங்களில் நிகழ்ச்சிக்கு 400 ரூபாய் (ரூ.200) என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மாமன்ற கூட்டத்தில், கவுன்சிலர்கள் ஒப்புதலுக்கு பின், இக்கட்டண விகிதங்கள் நடைமுறைப்படுத்தப்படும

Last Updated on Monday, 25 January 2010 06:34
 


Page 123 of 148