Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

நகராட்சி வரிபாக்கி ரூ. 6.45 லட்சம் வசூல்

Print PDF

தினகரன் 26.12.2009

நகராட்சி வரிபாக்கி ரூ. 6.45 லட்சம் வசூல்

நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில் சொத்துவரி பெயர்மாற்றம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆணையாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய 27 விண்ணப்பங்களும், குடிநீர் இணைப்பு மாற்றம் செய்ய 33 விண்ணப்பங்களும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு 72 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் நகராட்சிக்கு வரவேண்டிய வரிபாக்கி ரூ. 6.45 லட்சம் வசூலாகியுள்ளதாக நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Last Updated on Saturday, 26 December 2009 12:15
 

சொத்து வரி செலுத்தாத கட்டடங்களின் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும்: மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி 24.12.2009

சொத்து வரி செலுத்தாத கட்டடங்களின் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும்: மாநகராட்சி ஆணையர்

மதுரை, டிச. 23: மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் உள்ள கட்டடங்களின் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆணையர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் தெரிவித்ததாவது:

மாநகராட்சிக்கு சொத்து வரியை செலுத்தாமல் உள்ள கட்டடங்களுக்கான குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும்.

மேலும், வரி வசூல் செய்யாமல் மெத்தனமாக இருக்கும் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர்கள், வரித் தண்டலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, மாநகராட்சி இடங்களில் வாடகை அடிப்படையில் உள்ள கடை உரிமைதாரர்கள் மற்றும் ஏலதாரர்கள், மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய உரிமத் தொகையை உடனடியாக செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தாவிடில் கடைக்கான உரிமத்தை ரத்து செய்வதோடு கடையைப் பூட்டி பொறுப்பெடுத்து,இனிவரும் காலங்களில் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத அளவில் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும். மேலும், மாநகராட்சிக்கு ஏற்படும் இழப்பீட்டுத் தொகையும் சேர்த்து அவர்களிடம் வசூலிக்கப்படும் என்றார் ஆணையர்.

கூட்டத்தில், துணை ஆணையர் சு.சிவராசு, உதவி ஆணையர்கள் இரா.பாஸ்கரன், அ.தேவதாஸ், ரவீந்திரன், ராஜகாந்தி, அங்கயற்கண்ணி, உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் மற்றும் வரித் தண்டலர்கள் கலந்துகொண்டனர்.

Last Updated on Thursday, 24 December 2009 10:29
 

நாமக்கல் நகராட்சியில் குடிநீர், சொத்துவரி செலுத்த சிறப்பு முகாம்

Print PDF

தினமணி 24.12.2009

நாமக்கல் நகராட்சியில் குடிநீர், சொத்துவரி செலுத்த சிறப்பு முகாம்

நாமக்கல், டிச.23 : நாமக்கல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை வசூலிக்க சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்து வரி, குடிநீர் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கும் வகையில் வியாழக்கிழமை (டிச. 24) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும் நிலுவையின்றி செலுத்தி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள நகராட்சி ஆணையர் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Last Updated on Thursday, 24 December 2009 10:22
 


Page 127 of 148