Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

சொத்து வரி சிவகாசி நகராட்சி விளக்கம்

Print PDF

தினமணி 25.09.2009

சொத்து வரி சிவகாசி நகராட்சி விளக்கம்

சிவகாசி ,செப். 24: சிவகாசி நகராட்சியில் 2008 - 2009-ம் ஆண்டிற்கான சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து சிவகாசி நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி. அசோகன் தெரிவித்துள்ளதாவது:

அரசாணைப் படி குடியிறுப்பு வீடுகளுக்கு 25 சத வரியும், தொழிற்சாலைக்கு 100 சத வரியும், வணிக உபயோகத்திற்கு 150 சத வரியும் உயர்த்த உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது நகர்மன்றம் குடியிறுப்பு வீடுகளுக்கு 20 சதமும், தொழிற்சாலைகளுக்கு 75 சதமும், வணிக உபயோகத்திற்கு 100 சதமும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிலர் வரி உயர்வு அதிகமாக உள்ளது என மேல் முறையீடு செய்துள்ளனர்.

இதற்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளிலுள்ள வழிகாட்டுதலின் படி, கட்டடப் பரப்பளவு, தன்மை மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய இயலும் என தெரிவித்துள்ளார்.

எனவே நகர்மன்றத் தீர்மானம் செய்தபடி வரி வசூல் செய்யப்படும் என்றார்.

பொதுமக்கள் வரியைச் செலுத்தி, வளர்ச்சித் திட்டங்களான பாதாள சாக்கடை, எரி வாய்வு தகன மேடை, மானூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், மின் உற்பத்தி காற்றாலை, நகரை ஒளி மயமாக்குதல் உள்ளிட்டத் திட்டங்களை நிறைவேற்றிட ஒத்துழைப்புத் தர கேட்டுக் கொண்டார்.

Last Updated on Friday, 25 September 2009 06:01
 

நெல்லித்தோப்பு பகுதியினருக்கு தண்ணீர் வரி செலுத்த புதிய ஏற்பாடு

Print PDF

தினமணி 24.09.2009

நெல்லித்தோப்பு பகுதியினருக்கு தண்ணீர் வரி செலுத்த புதிய ஏற்பாடு

புதுச்சேரி, செப். 23: புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதி மக்களுக்கு தண்ணீர் வரி செலுத்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இத் தொகுதியின் எம்எல்ஏ ஓம்சக்திசேகர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

நெல்லித்தோப்பு தொகுதிக்கு உள்பட்ட மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் வரி செலுத்த கோரிமேட்டிலும், உப்பளத்திலும் உள்ள தண்ணீர் வரி செலுத்தும் அலுவலகத்தில் வரி செலுத்த சிரமப்பட்டனர்.

இது தொடர்பாக தொடர்ந்து அரசை வலியுறுத்தியதால் தற்போது என் தொகுதிக்கு உள்பட்ட டி.ஆர். நகர் 5-வது வீதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைந்துள்ள இடத்திலேயே இனி தண்ணீர் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி 24-ம் தேதி முதல் மக்களுக்குக் கிடைக்கும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 24 September 2009 06:55
 

காரைக்குடி நகராட்சியில் வரி வசூல் முகாம்

Print PDF

தினமலர் 24.09.2009

Last Updated on Friday, 25 September 2009 06:02
 


Page 133 of 148