Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

சொத்து வரி செலுத்தாத 10 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி கமிஷனர் அதிரடி

Print PDF
தினகரன்             16.03.2013

சொத்து வரி செலுத்தாத 10 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மாநகராட்சி கமிஷனர் அதிரடி


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் சொத்து வரி செலுத்தாத 5 கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டித்து மாநகராட்சி கமிஷனர் லதா அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

கோவை  மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி முதலிய அனைத்து நிலுவை மற்றும் நடப்பு கேப்பு தொகைகளையும் பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும். 2012-13 ம் இரண்டாம் அரையாண்டு 31-3-13ல் முடிவடைகிறது. வரும் 17,24, 31 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்களும் வழக்கம் போல் செயல்படும். வரி வசூல் பணியினை தீவிரப்படுத்தும் பொருட்டு நிலுவை வைத்துள்ள கட்டட உரிமைதாரர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. வடக்கு மண்டலம் பகுதியில் மட்டும் இதுவரை  10 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதை போன்று அனைத்து மண்டலங்களிலும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே  மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் நிலுவை  வைத்துள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாக உரிமைதாரர்கள் உடனடியாக நிலுவை தொகைகளை செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், குடிநீர் மற்றும்  பாதாள  சாக்கடை இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறும் மாநகராட்சி ஆணையர் லதா தெரிவித்துள்ளார்.
 

திருவலம் பேரூராட்சியில் 3 நாள்களில் ரூ.2 லட்சம் வரிவசூல்

Print PDF
தினமணி        14.03.2013

திருவலம் பேரூராட்சியில்  3 நாள்களில் ரூ.2 லட்சம் வரிவசூல்


திருவலம் பேரூராட்சியில் 3 நாள்கள் நடைபெற்ற தீவிர வரி வசூல் சிறப்பு முகாமில் ரூ.2 லட்சம் சூல் செய்யப்பட்டதாக பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி தெரிவித்துள்ளார்.

வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.எம்.மலையமான் திருமுடிக்காரி உத்தரவின் பேரில், திமிரி, பனப்பாக்கம், உதயேந்திரம் ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை தீவிர வரி வசூல் பணியில் ஈடுபட்டனர். இந்த மூன்று நாள்களில் ரூ. 2 லட்சம் வசூலிக்கப்பட்டதாக திருவலம் பேரூராட்சி செயல் அலுவலர் ச.கோமதி தெரிவித்தார்.
 

"ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிவசூல் மையங்கள் செயல்படும்'

Print PDF
தினமணி        14.03.2013

"ஞாயிற்றுக்கிழமைகளிலும்  வரிவசூல் மையங்கள் செயல்படும்'

மார்ச் இறுதி வரை மாநகராட்சி வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்று, ஆணையாளர் க.லதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

கோவை மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட நிலுவை மற்றும் கேட்பு வரிகளைச் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் தினமும் மாலை 5 மணி வரை செயல்படுகின்றன.

மார்ச் இறுதி வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சி வரிவசூல் மையங்கள் செயல்படும். வரிவசூல் பணியைத் தீவிரப்படுத்தும் பொருட்டு சொத்து வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் நிலுவை வைத்துள்ள கட்டட உரிமையாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு குடிநீர் துண்டிப்பு செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனே செலுத்த வேண்டும்.
 


Page 23 of 148