Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

"நகராட்சி வரிகளை செலுத்தாவிடில் நடவடிக்கை'

Print PDF
தினமணி         11.03.2013

"நகராட்சி வரிகளை செலுத்தாவிடில் நடவடிக்கை'


கோவில்பட்டி நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரியையும் உடனடியாக செலுத்துமாறு, நகராட்சி ஆணையர் வரதராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோவில்பட்டி நகராட்சி எல்கைக்கு உள்பட்ட வார்டுகளில் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையெனில், வீட்டு முன் தண்டோரா போட்டு வசூலிக்கப்படும். குடிநீர்க் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

எனவே, இந் நடவடிக்கைகளைத் தவிர்க்க பொதுமக்கள் வரிகளை உடனடியாகச் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
 

செய்யாறு நகராட்சியில் ரூ.3.90 லட்சம் வசூல்

Print PDF
தினமணி          09.03.2013

செய்யாறு நகராட்சியில் ரூ.3.90 லட்சம் வசூல்


செய்யாறு நகராட்சியில் ரூ.3.90 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று ஆணையர் பி.கே.ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு இனங்களின் மூலம் ரூ.3.90 லட்சம் வசூல் செய்யப்பட்டது. இப்பணியில் வருவாய் ஆய்வாளர் ப.சிவானந்தகுமார், சமுதாய அமைப்பாளர் சு.ந.அம்பேத்கர், இளநிலை உதவியாளர்கள் எஸ்.நடராசன், எம்.ரியாஷ்கான் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலரும் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தாராபுரம் நகராட்சி கடைகளுக்கு பழைய முறைப்படி வாடகை வசூல் ஆண்டுக்கு 1 கோடி வருமானம் இழப்பு மறு ஏலம் விட விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Print PDF
தினகரன்         09.03.2013

தாராபுரம் நகராட்சி கடைகளுக்கு பழைய முறைப்படி வாடகை வசூல் ஆண்டுக்கு 1 கோடி வருமானம் இழப்பு மறு ஏலம் விட விவசாயிகள் சங்கம் கோரிக்கை


தாராபுரம்:  தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை மறு ஏலம் நடத்த வேண்டும் என்று கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் காளிமுத்து கூறியதாவது:
 
தாராபுரம் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பேருந்து நிலையம், தினசரி மார்க்கெட், வணிக வளாகம், சந்தை பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வியாபாரக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் அனைத்தும் 20 லிருந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏலம் விடப்பட்டவைகள்.  அப்போதைய சந்தை மதிப்பு நிலவரப்படி மாத உரிமத்திற்கு ஏலம் எடுத்தவர்கள், நகராட்சிக்கு மாத வாடகையாக ரூ500 லிருந்து ரூ.600 வரையில் செலுத்தி வந்துள்ளனர். கடைகளுக்கும் வருடத்திற்கு ஒருமுறை வாடகையில் 5 சதவீத தொகை மட்டும் கூட்டப்பட்டு வந்தது.

அந்த வகையில் தற்போது மாத வாடகையாக கடைக்கு ரூ. 1,200 முதல் ரூ.1,600 வரையில் வசூலிக்கப்பட்டு வருகிறது.  மேற்சொன்ன கடைகள் பல ஆண்டுகள் ஆகியும் மறு ஏலம் விடப்படவில்லை. அதனால் இன்றைய சந்தை மதிப்பு நிலவரப்படி மிக குறைந்த வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த கடைகளை 1986ம் ஆண்டில் ஏலம் எடுத்தவர்களில் பலர் இறந்து விட்டனர். அவர்களது பெயரிலேயே வேறு நபர்கள் கடைகளை வைத்திருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் நகராட்சி கடைகளை உள்வாடகைக்கு விட்டு நாள் ஒன்றுக்கு ரூ.500 வரையில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.  பலர் தங்களது உரிமத்தில் இருந்த கடைகளை பக்கத்து கடைகாரர்கள் அல்லது வேறு நபர்களுக்கு ரூ. 2 லட்சம் வரையில் பணத்தை பெற்றுக் கொண்டு  கொடுத்துள்ளனர். இந்த மோசடிகளால் நகராட்சிக்கு நேரடியாக வரக்கூடிய வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தாராபுரம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நூறு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், நகர்பகுதியில் சிறுவர்களுக்கு என ஒரு பூங்கா இதுவரையில் அமைக்கப்படவில்லை. இருக்கின்ற பூங்காவை நகராட்சி நிர்வாகம் சரிவர பராமரிப்பதுமில்லை. பல வார்டுகளில் இன்னமும் அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்படவில்லை.

தீர்க்க முடியாத நிலையில் குடிநீர் பாற்றக்குறை இருந்து வருகிறது. போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகமோ வருவாய்க்கு வழிகள் இருந்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நகரமன்றம் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிப்பதால் நகர வளர்ச்சியில் அக்கரை கொள்ள முடியவில்லை.

மேற்சொன்ன கடைகள் மூலமாக தற்போது நகராட்சிக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.30 லட்சம் வரையில் மட்டுமே வருவாய் இருந்து வருகிறது. அனைத்து கடைகளையும் மறு ஏலத்திற்கு கொண்டு வரும் போது, ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பொது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். இந்த அடிப்படையில் தான் கடந்த 6ம் தேதி நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை மறு ஏலம் விடுவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. என்ன காரணத்தாலோ தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு, தற்போதுள்ள உரிமத்தை ரத்து செய்து மறு ஏலம் விடவேண்டும்.  என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
 


Page 25 of 148