Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

சொத்து வரி பெயர் மாற்றம் கூடுதல் கட்டணம் ரத்து

Print PDF

தினமலர்      27.08.2012

சொத்து வரி பெயர் மாற்றம் கூடுதல் கட்டணம் ரத்து

சென்னை : சொத்து வரி பெயர் மாற்ற கட்டணத்துடன், சில பகுதிகளில் கூடுதல் நிதி வசூலிப்பது ரத்து செய்யப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.மூன்று முதல், 14 வரையிலான, 12 வார்டுகள் திருவொற்றியூர் நகராட்சியில் இருந்து, மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகள். இங்கு சொத்து வரி பெயர் மாற்றத்தின்போது, ஐந்து லட்ச ரூபாய் வரை, 500 ரூபாயும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு லட்சத்திற்கும், 100 ரூபாய் குடிநீர், 100 ரூபாய் கழிவுநீர் கட்டண வரி என, செலுத்த வேண்டியுள்ளது.

இது குறித்து, மண்டலக்குழு தலைவர் தனரமேஷ், மாநகராட்சிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.மேயர் சைதை துரைசாமி, ""திருவொற்றியூர் நகராட்சியாக இருந்தபோது, போடப்பட்ட தீர்மானத்தின்படி, கூடுதல் வரி வசூலிக்கப்பட்டு, மாநகராட்சி கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது,'' என்றார்.

""மாநகராட்சியின், 200 வார்டுகளிலும், எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி, ஒரே மாதிரியான விதிமுறைகள் மட்டுமே பின்பற்றப்படும்,'' என்றும் மேயர் உறுதி அளித்தார்.

 

வீட்டு வரியை மறுசீராய்வு செய்ய கலெக்டர் உத்தரவு

Print PDF

தினமலர்     23.08.2012

வீட்டு வரியை மறுசீராய்வு செய்ய கலெக்டர் உத்தரவு

உசிலம்பட்டி:""வீட்டு வரியை முழுமையாக வசூலித்தும், குறைந்த மதிப்பீடு செய்யப்பட்ட வீடுகளை மறுஆய்வு செய்தும் உசிலம்பட்டி நகராட்சிக்கு வருவாயை அதிகரிக்கலாம்,'' என, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கூறினார்.உசிலம்பட்டி அருகே நடுப்பட்டியில், கலெக்டர் தலைமையில் நேற்று மனுநீதிநாள் நடந்தது. அவர் பேசுகையில், ""கிராம மக்களுக்காக அரசு பல நலத்திட்டங்களை வழங்குகிறது. ரூ.7.50 லட்சத்தில், நடுப்பட்டியில் சுகாதார வளாகம், குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்,'' என்றார். பின், உசிலம்பட்டி
நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

தலைவர் பஞ்சம்மாள், கமிஷனர் பாப்பம்மாள் மற்றும் கவுன்சிலர்கள், "சந்தை திடல் உட்பட பல இடங்கள் ஊராட்சிஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நகராட்சிக்கு வருமானம் பாதிக்கிறது' என்றனர்.கலெக்டர், ""நகராட்சியின் வருமானத்தை பெருக்க பலவழிகள் உள்ளன. வீட்டு வரியை முழுமையாக வசூலித்தல், குறைந்த மதிப்பீடு செய்யப்பட்ட வீடுகளை மறுஆய்வு செய்து வரியை கூட்டுதல், அரசு அலுவலகங்களில் இருந்து சொத்துவரி வசூலித்தல் மூலம் வருவாய் ஈட்டலாம். வரிகளை முழுமையாக வசூலித்தால் மட்டுமே அரசு நலத்திட்டங்கள் கிடைக்கும்,'' என்றார்.

 

வணிக நிறுவனங்கள் நிலுவை வரி வசூலிக்க மேட்டூர் நகராட்சி தீவிரம்

Print PDF

தினமலர்     23.08.2012

வணிக நிறுவனங்கள் நிலுவை வரி வசூலிக்க மேட்டூர் நகராட்சி தீவிரம்

மேட்டூர்: மேட்டூர் நகராட்சி வணிக நிறுவனங்கள் சொத்துவரி குறைப்படாதததால், 18 லட்சம் ரூபாய் வரை வரி நிலுவையில் உள்ளது. நிலுவை சொத்து வரி வசூலிக்க நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேட்டூர் நகராட்சியில் கடை, ஹோட்டல் உள்பட, 800க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். இரு ஆண்டுக்கு முன் நகராட்சி நிர்வாகம் வர்த்தக நிறுவனங்களுக்கான வரி வசூலை, 150 சதவீதம் உயர்த்தியது.திடீரென சொத்துவரியை, 150 சதவீதம் உயர்த்தியதற்கு வர்த்தகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

எனினும், சொத்துவரியை உள்ளாட்சி நிர்வாகமே முடிவு செய்யலாம் என, நீதிமன்றம் கூறி விட்டது.அதை தொடர்ந்து உயர்த்தப்பட்ட சொத்துவரி சதவீதத்தை குறைக்ககோரி வர்த்தகர்கள் நகராட்சியில் கோரிக்கை விடுத்தனர். சொத்துவரி சதவீதம் குறைக்க வேண்டும் என, எழுந்த கோரிக்கையால், வர்த்தகர்கள் பலர் சொத்துவரி செலுத்தவில்லை. இதனால், மேட்டூர் நகராட்சிக்கு, 18 லட்சம் ரூபாய் வரை வர்த்தக நிறுவனங்கள் வரி சொத்துவரி வசூலாகாமல் நிலுவையில் உள்ளது.வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று, 150 சதவீதம் உயர்த்தப்பட்ட வரியை, 110 சதவீதமாக குறைக்க நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அனுமதியை நகராட்சி நிர்வாக ஆணையம் வழங்கியவுடன் நிலுவை சொத்துவரியை முழுமையாக வசூலிக்க மேட்டூர் நகராட்சி முடிவு செய்துள்ளது.

 


Page 31 of 148