Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

ஆக.25க்குள் சொத்து வரி செலுத்த மாநகராட்சி கெடு

Print PDF

தினகரன்     22.08.2012

ஆக.25க்குள் சொத்து வரி செலுத்த மாநகராட்சி கெடு

நெல்லை, :  நெல்லை மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மோகன் கூறியருப்பதாவது:

நெல்லை மாநகராட்சிக்கு 2012-13 முத லாம்  அரையாண்டிற் கான சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள    சாக்கடை சேவை கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதற்கான கடைசி  நாள்  ஏப்.15 ஆகும்.

நடப்பு ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான வரியை செலுத்தாமல் நிலுவை வைத் துள்ள வரி விதிப்பாளர்களின் சொத்துகள் மீது ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆகிய  சட்டபூர்வ  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே நிலுவை மற்றும் நடப்பு அரையாண்டுக் கான சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்ட ணம், தொழில் வரி, கடை வாடகை, பாதாள சாக் கடை சேவை கடடணம் ஆகியவற்றை வரும் 25ம் தேதிக்குள் மாநகராட்சி கம்ப்யூட்டர் வரி வசூல் மையங்கள் மற்றும் வரி வசூலர்கள் மூலம் செலுத்த வேண்டும்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரியினங்களை செலுத்தி   சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு கமிஷனர் தெரிவித்துள்ளார்.
Last Updated on Wednesday, 22 August 2012 11:19
 

மாநகராட்சியில் பரபரப்பு ரூ.23 கோடி வரி தள்ளுபடி மீண்டும் கிளம்புகிறது புயல்

Print PDF

தினகரன்    16.08.2012

மாநகராட்சியில் பரபரப்பு ரூ.23 கோடி வரி தள்ளுபடி மீண்டும் கிளம்புகிறது புயல்

மதுரை, : தனியார் நிறுவனம் ஒன்றின் வரி பாக்கி ரூ.27 கோடியில், 23 கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது குறித்து 10 மாதங்களுக்கு பிறகு ஒருவர் தகவல் உரிமை சட்டத்தில் மனு அளித்து கேட்பதால், மூடி மறைக்கப்பட்ட இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து புயலை கிளப்புகிறது.

மதுரையில் ஒரு தனியார் ஆலைக்கு 1983ம் ஆண்டு முதல் சொத்து வரி பாக்கி இருந்தது. மாநகராட்சியில் ஆணையாளராக இருந்த பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி நோட்டீஸ் அனுப்பியும், அந்த நிறுவனம் பரப்பளவு அளவில் தவறு இருப்பதாக வழக்கு போட்டு வரி பாக்கி செலுத்தாமல் இருந்தது. 28 ஆண்டுகளில் நடைபெற்ற ஆய்வில் ஆணையாளர்கள் வரியை குறைக்க அனுமதிக்கவில்லை. ஆண்டு தோறும் வரி பாக்கி அதிகரித்து கொண்டே போனது.

கடந்த 2011 ஜூன் முதல் டிசம்பர் வரை ஆணையாளர் பொறுப்பில் இருந்த நடராஜன் இந்த விவகாரத்தை கையில் எடுத்து ஆய்வு நடத்தினார். அப்போது மொத்த பாக்கி ரூ.27 கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்து 659 ஆக இருந்தது. 2011 அக்டோபர் 18, 24 ஆகிய இரு தேதிகளில் ஆலை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிரடியாக ரூ.22 கோடியே 78 லட்சத்து 15 ஆயிரத்து 349 தள்ளுபடி செய்யப்பட்டது. ரூ.4 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரத்து 310 மட்டும் வசூலித்து முடிக்கப்பட்டது. தற்போதைய ஆண்டு வரி ரூ.33 லட்சத்து 79 ஆயிரத்து 344 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ரூ.23 கோடி அளவுக்கு தள்ளுபடி செய்தது குறித்து அப்போதைய ஆணையாளர் மாநகராட்சி மன்ற ஒப்புதலும் பெறவில்லை. இந்த விவகாரம் மாநகராட்சி தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் நடைபெற்றது. இதுகுறித்து மாநகராட்சி மன்றத்தில் பிரச்னை கிளம்பியபோது அது குறித்து தேவைப்பட்டால் மறு ஆய்வு செய்யப்படும் என மேயர் ராஜன் செல்லப்பா தெரிவித்தார். பெரும் தொகையை அதிரடி தள்ளுபடி செய்த ஆணை யாளர் நடராஜன் கடந்த டிசம்பரில் ஓய்வு பெற்று சென்று விட்டார். இந்த விவகாரம் தொடர்பான கோப்புகள் மூலையில் தூக்கி போடப்பட்டன. தொடர்புடைய அதிகாரிகள் தப்பித்தோம் என நிம் மதி பெருமூச்சு விட்டனர்.

இந்தச் சூழலில் ரூ.23 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான முழு விவரங்கள் வேண்டும் என கேட்டு தகவல் உரிமை சட்டத்தின் படி ஒருவர் மாநகராட்சியில் மனு அளித்துள்ளார். இதனால் விவரங்கள் ரிக்கார்டு பூர்வமாக நகல் எடுத்து அளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே மூலையில் தூக்கி போடப்பட்ட கோப்புகள் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளன. 10 மாதங்களாக மூடி மறைக்கப்பட்ட இந்த விவகாரம் தகவல் உரிம சட்டத்தால் மீண்டும் புயலை கிளப்பும் என தெரிகிறது.

கட்டிடமோ 5 மாடிவரி விதிப்பு 2 மாடிமதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மாநகராட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள், பில் கலெக்டர்கள் கூட்டத்தை கலெக்டர் அலுவலகத்தில் கூட்டி வரி வருவாய்குறித்து ஆய்வு நடத்தினார். மாநகராட்சி துணை ஆணையாளர் சாம்பவி தலைமையிலான குழுவினர் ஆஸ்பத்திரி, வர்த்தக கட்டிடம், வீடு உள்பட 15 கட்டிடங்களை அளந்து மறு ஆய்வு செய்ததில் ரூ.1 கோடியே 60 லட்சத்துக்கு வரி குறைத்து நிர்ணயித்து வசூலித்துவந்தது கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதவிர, பல்வேறு கட்டிடங்களை அதிகாரிகள் மறு ஆய்வு செய்ததில் ரூ.3 கோடியே 30 லட்சம் வரி குறைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது 5 மாடி உள்ள கட்டிடத்துக்கு 2 மாடிக்கு மட்டும் வரி விதிக்கப்பட்டது, வர்த்தக கட்டிடத்தை வீடாக காட்டி வரி நிர்ணயித்தது, மொத்த அளவுகளை குறைத்தல் போன்ற முறைகேடுகள் மூலம் பெரும் தொகை வரியை குறைத்து மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடங்களுக்கு தற்போது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன.

வரி விதிக்கப்படாத கட்டிடங்களும், அளவு குறைத்தல், வர்த்தக கட்டிடத்தை வீடுகளாக கணக்கு காட்டுதல் உள்பட பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உள்ளன. எனவே அனைத்து கட்டிடங்களையும் மறு ஆய்வின் மூலம் அளந்து கணக்கிட்டால் மாநகராட்சி வருவாய் பல கோடிகள் அதிகரிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

தினமலர் செய்திக்கு கமிஷனர் உடனடி ஆக்ஷன்: வரிச் செலுத்த வரும் பொதுமக்கள் கடும் குஷி

Print PDF

தினமலர்   02.08.2012

தினமலர் செய்திக்கு கமிஷனர் உடனடி ஆக்ஷன்: வரிச் செலுத்த வரும் பொதுமக்கள் கடும் குஷி

தூத்துக்குடி : தினமலர் செய்தியை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதால் மாநகராட்சிக்கு வரி செலுத்த வரும் பொதுமக்கள் நிம்மதியாக தங்களது வாகனங்களை விட்டு வரிச் செலுத்தி திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே நகரின் இதயமான பகுதியில் அமைந்துள்ளது. இதனை சுற்றி மார்கெட் உள்ளிட்ட இடங்கள் இருப்பதால் இந்த பகுதி எப்போதும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறது.

மாநகராட்சிக்கு தினமும் சொத்துவரி உள்ளிட்ட வரிகளை கட்டவும், அடிப்படை வசதிகளுக்காக அதிகாரிகளை அணுகவும், பிளான் அப்ரூவல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அதிகமான மக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களது வாகனங்களை அலுவலகத்திற்குள் விடுவதற்கு கூட இடமில்லாமல் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கு காரணம் மாநகராட்சி அலுவலகத்தை அறிவிக்கப்படாத வாகன காப்பகம் போல் மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள கடைக்காரர்கள், வியாபாரிகள் என்று பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தவிர பொதுமக்கள் சிலர் திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து இருசக்கர வாகனத்தை லாக் செய்து பூட்டி வைத்து விட்டு சென்று விடுகின்றனர். திரும்ப அவர்கள் இஷ்டத்திற்கு வரும் போது எடுத்து செல்கின்றனர்.

சில டூவிலர்கள் இரண்டு நாள் முதல் நான்கு நாட்கள் வரை வேப்பமர நிழலில் நிற்கும் நிலை உருவாகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அதிகமான இருசக்கர வாகனங்களை இப்படி வைத்து விட்டு சென்று விடுவதால் வரிச் செலுத்த வருவோர் வாகனத்தை நிறுத்த முடியாமலும், மாநகராட்சி நான்கு சக்கர வாகனங்கள் கூட நிறுத்த முடியாத அளவிற்கு நிலமை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக தினமலரில் படத்துடன் செய்தி வெளியாகியது. தினமலர் செய்தியை தொடர்ந்து கமிஷனர் மதுமதி இது சம்பந்தமாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். மாநகராட்சி பணியாளர்கள் அனாவசியமாக மாநகராட்சி அலுவலகத்திற்குள் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

அவர்களை இங்கு வாகனங்கள் நிறுத்த கூடாது என்று எச்சரிக்கை செய்ய வேண்டும். மீறி வாகனத்தை விட்டால் அதனை லாக் மூலம் பூட்டி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனை கண்காணிக்க பணியாளர்களை நியமிக்குமாறும் கமிஷனர் மானேஜருக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் வெளியாட்களின் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. வரி செலுத்த வருவோர் வாகனம் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டன. மாநகராட்சி ஊழியர்கள் வெற்றி, முனியசாமி ஆகிய இரண்டு பணியாளர்கள் மாநகராட்சி வாயில் பகுதியில் நின்று அனாவசியமாக உள்ளே வரும் வாகனங்களை உள்ளே அனுமதிக்க விடாமல் தடுத்தனர்.

வழக்கமாக வெளியாட்கள் வாகனத்துடன் உள்ளே வரும் போதே தடுத்து நிறுத்தி அவர்களை வெளியில் அனுப்பினர். இதனால் பல வாகனங்கள் நேற்று உள்ளே வராமலே வெளியில் சென்றன. இதனால் ஒட்டு மொத்த வாகன காப்பகம் போல் இருந்த மாநகராட்சியின் வாயில் பகுதி இருசக்கர வாகனங்கள் இல்லாமல் அந்த இடமே பளிச் சென்று காணப்பட்டது.இந்த இடங்களில் நோ பார்க்கிங் போர்டு வைத்தால் நன்றாக இருக்கும். அதனை மாநகராட்சி செய்ய வேண்டும். மேலும் மாநகராட்சி அலுவலகத்திற்கு பின் பகுதியில் அதிகமான காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டு வாகனம் நிறுத்துவதற்கு இடம் அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 


Page 32 of 148