Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

வரிகளை உரிய காலத்தில் செலுத்தினால் பரிசு

Print PDF

தினமணி                    31.07.2012

வரிகளை உரிய காலத்தில் செலுத்தினால் பரிசு

செய்யாறு, ஜூலை 30: நகராட்சி  வரிகளை  உரிய காலத்தில்  செலுத்துவோரை  ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பரிசு அல்லது  சிறிதளவு  தள்ளுபடி  தரவேண்டும்  என  திங்கள்கிழமை நடைபெற்ற திருவத்திபுரம் நகர்மன்றக் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

 நகர்மன்ற துணைத் தலைவர் கே.எஸ்.செல்வராஜ், இவ்வாறு யோசனை தெரிவித்தார்.மேலும்  நகரில் டெங்கு காய்ச்சல் பரவாமல்  தடுக்க   வார்டுகளில்  கொசு  மருந்து    தெளிக்க வேண்டும், குடிநீரை முறையாகச் சுத்திகரித்து வழங்க வேண்டும், நகர்மன்றக் ட்டத்தில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும், வார்டுகளில் தெருப் பெயர்களை தாங்கிய பலகைகள் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

இக் கோரிக்கைகள்  மீது  உரிய  நடவடிக்கை  எடுக்கப்படும்  என நகர்மன்றத்  தலைவர் பாவை ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

செய்யாறு அரசு கலைக்  கல்லூரியில் ரூ.1 கோடி  மதிப்பில் உள்கட்டமைப்பு வசதியுடன், புதிய பாடப்பிரிவுகளைத்  தொடங்கிட  உத்தரவிட்ட முதல்வருக்கு  நன்றி  தெரிவித்து  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

பத்து ஆண்டாக குடிநீர் வரி பாக்கி அரசு பணிமனைக்கு எச்சரிக்கை

Print PDF

தினமலர்                30.07.2012

பத்து ஆண்டாக குடிநீர் வரி பாக்கி அரசு பணிமனைக்கு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வரி பாக்கி செலுத்தாத அரசு போக்குவரத்துக் கழக கிளை பணிமனை நிர்வாகத்திற்கு நகராட்சி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை (விழுப்புரம் கோட்டம்) நிர்வாகம் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து குடிநீர் வரி செலுத்தாமல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் அருணாசலம் உத்தரவின் பேரில் நகராட்சி வரி வசூலிப்பாளர் சித்ரா தலைமையிலான அலுவலர்கள் ராஜி, முருகன், கில்டாரோசினி, திருச்செல்வி ஆகியோர் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு சென்றனர். குடிநீர் இணைப்பு வரி பாக்கி 12 ஆயிரத்து 600 ரூபாயை உடனடியாக கட்ட வேண்டும் என்றும், தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் நேபாள தெருவில் குடிநீர் இணைப்புக்கு வரி பாக்கி செலுத்தாத 5 வீடுகளின் இணைப்புகள் மற்றும் கணக்கில் வராத 5 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் ரூபாய் குடிநீர் வரி பாக்கி வசூல் செய்யப்பட்டது.

 

"குடிநீர் கட்டணத்தை உடனடியாக செலுத்தி துண்டிப்பை தவிர்க்கவும்'

Print PDF

தினமணி               27.07.2012

 "குடிநீர் கட்டணத்தை உடனடியாக செலுத்தி துண்டிப்பை தவிர்க்கவும்'

 கோவில்பட்டி, ஜூலை 26:  கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணத்தை உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்  தவிர்க்குமாறு நகராட்சி ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நகராட்சி ஆணையர் வரதராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவில்பட்டி நகராட்சி மூலம் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் நடப்பு வரை கட்டணம் செலுத்தாத நபர்கள், உடனடியாக கட்டணத்தை நிலுவையின்றி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாமல் நிலுவையில் உள்ள இணைப்புகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி துண்டிக்கப்படும். எனவே, குடிநீர் கட்டணம் நிலுவையை உடனடியாக செலுத்தி குழாய் இணைப்பு துண்டிப்பை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

 


Page 33 of 148