Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Taxation

விரிவாக்க பகுதி குடிநீர் கட்டணம் ஜன., 2 முதல் வசூல் மையங்கள்

Print PDF

தினமலர்         26.12.2011

விரிவாக்க பகுதி குடிநீர் கட்டணம் ஜன., 2 முதல் வசூல் மையங்கள்

சென்னை:மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் குடிநீர் வரி செலுத்த வசதியாக, வசூல் மையங்கள் ஜன., 2 முதல் திறக்கப்படும் என, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியில், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், திருவொற்றியூர், கத்திவாக்கம், மாதவரம், மணலி, உள்ளகரம்-புழுதிவாக்கம், மதுரவாயல் என 9 நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் இணைத்து விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில், குடிநீர் கட்டணம் வசூலிக்க வசதியாக, ஜன., 2ம் தேதியன்று, குடிநீர் கட்டண வசூல் மையங்கள் திறக்கப்பட உள்ளது.

மையம் அமையும் இடங்கள் திருவொற்றியூர் நகராட்சி அலுவலகம், தேரடி தெரு, கத்திவாக்கம் பழைய நகராட்சி அலுவலகம், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி பகுதி அலுவலகங்கள், கொரட்டூர் தண்ணீர் தொட்டி, வெங்கடராமபுரம் சமுதாய மையம், மதுரவாயல் பூந்தமல்லி சாலை, ஆலப்பாக்கம் குடிநீர் நிரப்பு மையம், ஆதம்பாக்கம் பார்த்தசாரதி தெரு, நங்கநல்லூர், பி.வி.நகர், ஆதம்பாக்கம் மேல்நிலைத் தொட்டிகள் உள்ள இடங்கள் என 17 இடங்களில் இந்த மையங்கள் அமைகின்றன.ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளோர், வரி வசூலிப்போரிடம் செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதற்காக, 38 பணிமனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டணத்தை 'ஞிட்தீண்ண்ஞ' என்ற பெயரில் காசோலை, வங்கி வரைவோலையாகவும் செலுத்தலாம்.

 

நிலுவை வரிகளைச் செலுத்த மாநகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமணி                   01.07.2011

நிலுவை வரிகளைச் செலுத்த மாநகராட்சி வேண்டுகோள்

திருநெல்வேலி, ஜூன் 30: திருநெல்வேலி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களை மாநகராட்சிக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ந. சுப்பையன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சியின் நிலுவை மற்றும் நடப்பு வரிகளை வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நடமாடும் வரிவசூல் வாகனம் வார்டு வாரியாக அனுப்பப்பட்டு வரிவசூல் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை அருகில் உள்ள வார்டு அலுவலகங்கள் மற்றும் அலகு அலுவலகங்களில் செலுத்தலாம் எனினும் நடமாடும் வாகனம் தெருக்களுக்கே வந்து வரி வசூல் செய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் தங்களுடைய நடப்பு வரி மற்றும் நிலுவை வரிகளை மாநகராட்சியில் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் அவர்.

 

மாநகராட்சி விரிவாக்க பகுதிக்கு வரிவிலக்கு

Print PDF

தினமலர்              29.06.2011

மாநகராட்சி விரிவாக்க பகுதிக்கு வரிவிலக்கு

மதுரை:மதுரை மாநகராட்சி விரிவாக்கத்தில் இடம்பெறும் பகுதிகளுக்கு வரிவிலக்கு அளிக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாநகராட்சியின் 72 வார்டுகளை , 100 வார்டுகளாக விரிவாக்கும் பணி நடந்து வருகிறது. நகராட்சிகளில் ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம், பேரூராட்சிகளில் ஆர்.வி.பட்டி, திருநகர், விளாங்குடி, ஊராட்சியில் மேலமடை, உத்தங்குடி, வண்டியூர், கண்ணனேந்தல், நாகனாகுளம், திருப்பாலை, சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, ஐராவதநல்லூர், புதுக்குளம், தியாகராஜர் காலனி பகுதிகள், மதுரை மாநகராட்சியோடு இணைகின்றன. இதற்கான பணி நடந்து வரும் நிலையில், மாநகராட்சி வரி குறித்து, இணைப்பு பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை தடுக்கும் விதமாக வரிச்சலுகை வழங்க மாநகராட்சி முன்வந்துள்ளது. கமிஷனர் செபாஸ்டின் கூறியதாவது: புதிதாய் இணையும் பகுதிகளில் வசதிகள் குறைவாக இருப்பதால், மாநகராட்சிக்குரிய வரி விதிப்பதில் நியாயமில்லை. வசதிகள் செய்து தரும் வரை, தற்போதைய வரி தொடரும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பணியாளர்கள், மாநகராட்சி பணியில் ஈடுபடுத்தப்படுவர், என்றார். புதிதாய் இணையும் பகுதிகளுக்கு, கட்டமைப்பு வசதிகள் செய்து தர 1500 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தயார் செய்து, மாநகராட்சி சார்பில் அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

 


Page 34 of 148