Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெடுஞ்சாலை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

Print PDF

தினகரன்     24.05.2010

நெடுஞ்சாலை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

திருப்பூர், மே 24: திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் நெடுஞ்சாலைப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி முன்னிலை வகித் தார்.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் சந்தானம், மாவட்ட வரு வாய் அதிகாரி முரளிதரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ரேணுகா தேவி, மேயர் செல்வராஜ், தாராபுரம் எம்.எல்.. பிரபா வதி, காங்கயம் எம்.எல்.. விடியல் சேகர், திருப் பூர் மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி, 15.வேலம்பாளையம் நகராட்சி தலைவர் எஸ்.பி. மணி, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்கள் பாலாஜி (பொது), அரிராஜ் (திட்டங்கள்), கோபால் (வடிவமைப்பு), சண்முகநாதன் (கிராம சாலைகள்) ஆகி யோர் கலந்து கொண்ட னர்.

கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் எந்தெந்த பணிகள் முடிந்து விட்டது. எந்த பணிகள் முடிவடையாமல் தாமதமாக நடக்கிறது. தாமதத்துக்கான காரணம் என்ன? பணிகள் நடைபெறும் போது என்னென்ன இடர்பாடுகள் ஏற்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்கப்படுகிறது. சாலை அமைக்கும் போது மற்ற துறையினரான மின்வாரியம், குடிநீர் வடிகால் துறை, தொலைபேசித்துறையால் ஏற்படும் சுணக்கம் குறித்தும் அந்தந்த துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்யப்படுகிறது.

மாநகர, நகர பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளு டன், ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் உள்ள உள் ளாட்சி சாலைகளை இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் 4 ரயில்வே மேம்பாலங்களும், ஒரு ரெயில்வே கீழ்பாலமும் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் பேசினார். அமைச்சர் தலைமையில் நடந்தது.