Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சி சாலைகளுக்கு காப்பீடு வசதி அமைச்சர் ஆலோசனை

Print PDF

தினகரன் 11.06.2010

பெங்களூர் மாநகராட்சி சாலைகளுக்கு காப்பீடு வசதி அமைச்சர் ஆலோசனை

பெங்களூர், ஜூன் 11: மாநிலத்தின் அனைத்து மாநகராட்சிகளில் உள்ள சாலைகளை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரும் யோசனை அரசிடம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் ஆலோ சனை நடத்தியுள்ளார்.

ஹூப்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட வித்யாநகரில் 800 மீட்டர் சாலையை, அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்த கடந்த 2007 ஆகஸ்ட் முதல் 2008 ஜூலை வரை ரூ.2 லட்சத்திற்கு காப்பீடு செய்தனர். இதற்கான ஆண்டு பிரீமியம் ரூ.303ஐ அப்பகுதி மக்களே சேகரித்து வங்கியில் செலுத்தினர்.

நாட்டில் இதுவரை எங்கும் இதுபோன்று செயல்படாததால், லிம்கா சாதனை புத்தகத்தில் இது இடம் பெற்றது. தற்போது அப்பகுதி மக்கள் சாலையை ரூ.9 லட்சத்திற்கு காப்பீட்டு செய்துள்ளனர்.

இதற்கான பிரீமியம் தொகை ரூ.910யை செலுத்தி வருகிறார்கள். வித்யாநகர் பகுதி மக்களின் புதுமையான முயற்சி, மாநிலம் முழுவதும் செயல்படுத்தும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை மாநிலம் முழுவதும் உள்ள 7 மாநகராட்சிகளில் செயல்படுத்த அரசு யோசித்து வருகிறது.

மாநகரில் உள்ள சாலைகளை பொதுமக்கள் பராமரித்து கொள் வதுடன், காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொண்டால், ஒப்பந்த காரர்கள் மூலம் மேற் கொள் ளும் பணியில் குளறுபடி நடந் தாலோ அல்லது இயற்கை சீற்றத்தால் நாச மடைந்தாலோ, காப்பீடு பெறும் நிறுவனம், புனரமைப்பு பணியை மேற்கொள்ளும்.

இதன் மூலம் அரசுக்கு நிதி சுமை ஏற்படாது என்பதால், இதை செயல்படுத்த நகர வளர்ச்சிதுறை அமைச்சர் சுரேஷ்குமார் முடிவு செய்துள்ளார்.

இத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நகர வளர்ச் சிதுறை அமைச்சக அதிகாரிகளுடன் முதல் சுற்று ஆலோசனை முடித்துள்ள அமைச்சர், திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சாதக&பாதகம் குறித்து அறிக்கை கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

இந்த வார இறுதியில் அறிக்கை கிடைத்ததும், நகர வளர்ச்சி சட்டத்தில் சில திருத்தம் செய்து, வரும் மழை கால கூட்டத்தொடரில் பேரவையில் தாக்கல் செய்து, உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று செயல் படுத்தும் யோச னையில் அமைச்சர் சுரேஷ்குமார் உள்ளார்.