Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சியில் ரூ. 2.10 லட்சத்தில் சிமென்ட் சாலை

Print PDF

தினமணி 17.06.2010

கரூர் நகராட்சியில் ரூ. 2.10 லட்சத்தில் சிமென்ட் சாலை

கரூர், ஜூன் 16: கரூர் நகராட்சியில் ரூ. 2.10 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கரூர் நகராட்சி 10-வது வார்டுக்குள்பட்ட கோபாலபுரத்திலுள்ள சந்துப் பகுதியிலுள்ள மண் சாலையை சிமென்ட் சாலையாக மாற்றித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கரூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.10 லட்சத்தை சட்டப்பேரவை உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து இந்தப் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. வி. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.

அதிமுக மாவட்டப் பொருளாளர் பி.கே.எஸ். முரளி, ஜெ. பேரவைச் செயலர் எஸ். காமராஜ், நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், அவைத் தலைவர் அங்குசிவலிங்கம், கவுன்சிலர்கள் எஸ். கமலா, எஸ். வளர்மதி, இனாம்கரூர் நகர ஜெ. பேரவைச் செயலர் வி. செல்வராஜ், நகர சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் எம். முகமதுசாதிக், பேச்சாளர் கே. மூர்த்தி, நிர்வாகி பி. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.