Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.8 கோடி செலவில் பெங்களூர்&ஓசூர் நான்குவழி சுரங்கப்பாதைஅடுத்த வாரம் திறப்பு

Print PDF

தினகரன் 22.06.2010

ரூ.8 கோடி செலவில் பெங்களூர்&ஓசூர் நான்குவழி சுரங்கப்பாதைஅடுத்த வாரம் திறப்பு

பெங்களூர், ஜூன் 22:பெங்களூர்&ஓசூர் சாலையில் ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் நான்கு வழி சுரங்கபாதை அமைக்கும் பணி இன்னும் 10 நாட்களில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் பெங்களூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மாநகரில் மக்கள் தொகைக்கு இணையாக வாகன பெருக்கம் இருப்பதின் காரணமாக, எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதை தவிர்க்க மாநில அரசு மற்றும் மாநகராட்சி பல முயற்சிகள் மேற்கொண்டும் மக்களின் சுமையை போக்கும் முழுமையான பலம் கிடைக்கவில்லை.

மாநகரில் சுரங்க பாலம் அமைக்கும் பணி தொடங்கினால், முடிக்க பல மாதங்கள் இழுத்து செல்லப்படுகிறது.

இதை தவிர்க்கும் நோக்கத்தில் 24 மணி நேரத்தில் அண்டர்பாஸ் என்ற திட்டம் சில மாதங்களுக்கு முன் காவிரி மற்றும் பி.டி.. சதுக்கத்தில் அமைக்கப்பட்டது. பணிகள் தொடங்கினாலும் திட்டமிட்டப்படி 24 நேரத்தில் முடிக் கவில்லை.

இது மாநகராட்சியின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாநகரில் பிரிகாஷ்ட் அண்டர்பாஸ் திட்டம் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதன் முதல் கட்டமாக மகாராணி கல்லூரி சதுக்கத்தில் பிரிகாஷ்ட் அண்டர்பாஸ் சுரங்க பாலம் அமைக்கப்பட்டது.

இதில் நல்ல முன்னேற்றம் கிடைத்ததை தொடர்ந்து, பெங்களூர்&ஓசூர் சாலையில் உள்ள லஷ்கர் சாலை சந் திப்பில் ரூ.8 கோடி செலவில் நான்கு வழிகள் கொ ண்ட பிரிகாஷ்ட் அண்டர்பாஸ் சுரங்க பாலம் அமைக் க முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிக்கல் நாட்டு விழா கடந்த மே 26ம் தேதி நடந்தது. மேயர் எஸ்.கே.நடராஜ் பூஜை செய்து தொடங்கி வைத்தார். 3 மாதத்திற்குள் பாலம் அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் தொடங்கப் பட்டது. ஆனால் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி காரணமாக 26 நாட்களில் 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.

இன்னும் 15 நாட்களுக்கும் பாலம் அமைக்கும் பணி முழுமையாக முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று மாநகராட்சி பொறியாளர் கே.டி.நாகராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.