Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி நிர்வகிக்கும் 14 சாலைகளை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க திட்டம்

Print PDF

தினமணி 28.06.2010

மாநகராட்சி நிர்வகிக்கும் 14 சாலைகளை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க திட்டம்

திருப்பூர், ஜூன் 26: திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட 14 சாலைகளை நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்புக்கு ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான கருத்துருக்களை அரசுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

÷திருப்பூர் மாநகரில், புஷ்பா தியேட்டர் ரவுண்டானா முதல் மாநகராட்சி எல்லைக்கு வரை கிழமேல் திசையிலான கல்லூரிச்சாலை, அவிநாசி சாலையையும் பெருமாநல் லூர் சாலையையும் இணைக்கும் 60 அடி ரோடி, வலையன்காடு மெயின் ரோடு (அ விநாசி சாலை முதல் மாநகராட்சி எல்லை வரை), அங்கேரிபாளையம் சாலை, கண் ணகி நகர் 60 அடி சாலை (பெருநல்லூர் சாலையையும், டிஎன்கே.புரம் சாலையும் இணைக்கும் சாலை), கொங்குநகர் பிரதான சாலை (டிஎன்கே.புரம் பிரதான சாலை);

÷வஉசி.நகர் மெயின் ரோடு, நடராஜா தியேட்டர் சாலை - நேரு வீதி மற்றும் குமரன் சாலை, வெள்ளிவிழா பூங்கா சாலை, மங்கலம் சாலை-முருகம்பாளையம் சாலை, பல்லடம் சாலை - மங்கலம் சாலை, காங்கயம்பாளையம் புதூர் சாலை தாராபுரம் சாலை சந்திப்பு முதல் காங்கயம் சாலை வேலன் ஹோட்டல் வரை, தென்னம்பாளை யம் சாலை (சந்தைப்பேட்டை முதல் தாராபுரம் சாலை சந்திப்பு வரை) ஆகிய 14 சாலைகள் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

÷நாளுக்குநாள் பெருகி வரும் வாகன எண்ணிக்கை காரணமாக, இச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை கருத்தில் கொண்டு இச்சாலைகளை நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்புக்கு ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டு, மாமன்ற அனுமதியுடன் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் தயார் செய்துள்ள கருத்துருக்களுக்கு ஜூன் 29-ல் நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் மாமன்ற அனுமதிக்கு வைக்கப்பட உள்ளது. மன்ற அனுமதி கிடைத்தவுடன் அரசுக்கு அனுப்பி மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பிலுள்ள 14 சாலைகளும் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.