Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.21 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்

Print PDF

தினமணி 22.07.2010

கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.21 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி, ஜூலை 21: கிருஷ்ணகிரி நகராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிருந்து ரூ.21 லட்சம் மதிப்பிலான சாலை புதுப்பிக்கும் பணிகளை டி.செங்குட்டுவன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் வார்டு எண் 5-ல் உள்ள குப்பமேடுத் தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பிக்கும் பணி, பெங்காலி தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் கான்கிரிட் சாலைகள் புதுப்பிக்கும் பணி, 8-வது வார்டில் நரசிம்ம சுவாமி கோயில் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பில் தார் சாலை புதுப்பிக்கும் பணி, 10-வது வார்டு டி.பி.சாலையில் ரூ.4 லட்சம் மதிப்பில் தார் சாலை புதுப்பிக்கும் பணி மற்றும் 14-வது வார்டு பாப்பாரப்பட்டியில் உள்ள மயானத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் ஈமச்சடங்கு மண்டபம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி என ரூ.21 லட்சம் மதிப்பிலான பணிகளை கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ டி.செங்குட்டுவன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், நகர்மன்ற உறுப்பினர்கள் சுமதி, மீனா, பழனி, ஆணையர் பௌலோஸ், திமுக நகரச் செயலர் நவாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.