Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மும்பை சாலைகளில் குண்டு, குழிகள் 10 நாளில் சீர்படுத்தப்படும்

Print PDF

தினகரன் 29.07.2010

மும்பை சாலைகளில் குண்டு, குழிகள் 10 நாளில் சீர்படுத்தப்படும்

மும்பை, ஜூலை 29: குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் இன்னும் 10 நாளில் சீர்ப்படுத்தப்படும் என்று மும்பை பொறுப்பு அமைச்சரிடம் மாநகராட்சி உறுதி அளித்துள்ளது.

மும்பையில் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாக மாநில அரசுக்கு பல புகார்கள் வந்ததை தொடர்ந்து நேற்று மும்பை பொறுப்பு அமைச்சரான ஜெயந்த் பாட்டீல் மாநகராட்சி அதிகாரிகளுடன் பெடர் ரோடில் இருந்து நரிமன் பாயின்ட்டுக்கு செல்லும் பிரதான சாலையை ஆய்வு செய்தார்.

இதன் பிறகு பேட்டி அளித்த ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:

சாலைகளின் நிலை மோசமாக இருப்பதை மாநகராட்சி ஒத்துக் கொண்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் சாலைகளில் உள்ள குண்டு குழிகளை நிரப்பி சீர்ப்படுத்துவதாக என்னிடம் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். 10 நாட்களுக்கு பிறகு நான் மீண்டும் சாலைகளை ஆய்வு செய்வேன்.

சாலை அமைக்கும் பணி தொடர்பான முறைகளை மாநகராட்சி மாற்ற வேண்டும். அப்போதுதான் மழைக்காலத்தில் மீண்டும் மீண்டும் இந்த பிரச்னை ஏற்படாது.

சாலைகளில் குண்டு குழிகள் ஏற்பட்டு பழுதடைந்தால் கான்ட்ராக்டரை பொறுப்பாளராக்க வேண்டும். அவருக்கு எதிர்காலத்தில் சாலை பணிகள் எதையும் மாநகராட்சி கொடுக்கக்கூடாது.

மலேரியா நோயின் தாக்கம் ஒர்லி, பரேல், குர்லா, பைகுலா, அந்தேரி, ஜோகேஸ்வரி மற்றும் தாதர் ஆகிய இடங்களில அதிகளவில் உள்ளது. மலேரியா நோயாளிகளில் 58 சதவீதம் பேர் இந்த பகுதிகளை சேர்ந்தவர்கள்.

சிகிச்சை எடுப்பதை தாமதப்படுத்துவதால் தான் மலேரியாவால் நோயாளிகள் உயிரிழக்கின்றனர். மலேரியா நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதாக ஜூபிடர் மற்றும் லீலாவதி மருத்துவமனைகளின் தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பான உண்மைகளை கண்டறியுமாறு நான் மும்பை மாநகராட்சியை கேட்டுக்கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.