Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலைகளை புதுப்பிக்க வேண்டும்

Print PDF

தினமணி 02.08.2010

சாலைகளை புதுப்பிக்க வேண்டும்

நாமக்கல், ஆக. 1: நாமக்கல் நகராட்சிப் பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

÷நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சியின் நாமக்கல் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட நகர நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

÷நகரச் செயலர் அம்மன் வி. வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி. சம்பத்குமார், மாநில மாணவரணி துணைச் செயலர் என். மகேஸ்வரன், வழக்கறிஞர் எஸ்.கே. வேல், கேப்டன் மன்ற மாவட்டச் செயலர் விஜயன் உள்ளிட்ட பலர் பேசினர்.

÷நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன உரிமையாளர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. மேலும், காய்கறிகள் உள்பட அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ÷நாமக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்கான பணிகள் முடிந்த பின்னரும் புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால், நகரச் சாலைகள் அனைத்துமே குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சாலைகளை புதுப்பிக்க வேண்டும்.

÷ இதேபோல், நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் துர்நாற்றத்துடன் சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் உள்ளதை தூய்மைப்படுத்தி பயணிகளுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும். புதிய குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக நகரில் தோண்டப்படும் குழிகளை முழுமையாக மூட வேண்டும்.