Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராமநாதபுரம் நகரில் புதிய சாலை அமைக்க ரூ.5.57 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 10.08.2010

ராமநாதபுரம் நகரில் புதிய சாலை அமைக்க ரூ.5.57 கோடி ஒதுக்கீடு

ராமநாதபுரம், ஆக.10: ராமநாதபுரம் நகரில் புதிய சாலைகள் அமைக்க ரூ.5.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகள் அமைக்கும் பணிகள் விரை வில் துவங்க உள்ளன.

ராமநாதபுரம் நகரில் ரூ.31.57 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இதில் 95சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடர்பாக பொதுமக்கள் பங்களிப்பு தொகை இன்னும் வர வேண்டிய நிலை உள்ளதால், சாலைகளை செப்பனிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது புதிய சாலைகள் அமைக்க ரூ.5.57கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முஜிபுர்ரகுமான் கூறுகையில், ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பங்களிப்பு தொகை மிகவும் மந்தமாக உள்ளது. இதனால் பணி முடிவடைந்த பகுதிகளில் புதிதாக சாலை அமைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

புதிய சாலைகள் அமைக்க ரூ.5.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10.6 கி.மீ து£ரம் சாலை அமைக்கப்பட உள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் இன்னும் இணைப்பு கட்டணம் செலுத்தாமல் அதிகம் பேர் உள்ளனர். தாமதமாக பணம் செலுத்தி இணைப்பு பெறுவோருக்கு குடிநீர் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடர்பாக முழு அளவில் பணம் செலுத்திய பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாலைகள் அமைக்கப்படும். விரைவாக பணம் செலுத்தி தாமதத்தை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், என்றார்.