Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஐந்து கி.மீ., தூரத்திற்கு பள்ளிக்கரணையில் தார் சாலைகள்

Print PDF

தினமலர் 16.08.2010

ஐந்து கி.மீ., தூரத்திற்கு பள்ளிக்கரணையில் தார் சாலைகள்

பள்ளிக்கரணை : பள்ளிக்கரணை பேரூராட்சி பகுதியில், 80 லட்சம் ரூபாய் செலவில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலைகள் அமைக்க அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளிக்கரணை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வினியோக திட்டம் மற்றும் இயற்கை சீற்றங்களால், சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதையடுத்து, மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக பள்ளிக்கரணை பேரூராட்சித் தலைவர் பஞ்சலிங்கம் தலைமையில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், துணைத் தலைவர் பாபு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில், பள்ளிக்கரணை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு 2010-11ம் ஆண்டு சிறப்பு சாலைகள் திட்டத்தில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலைகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.