Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.20 லட்சத்தில் புதிய சாலைகள்: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி 16.08.2010

ரூ.20 லட்சத்தில் புதிய சாலைகள்: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

திருக்காட்டுப்பள்ளி,​​ ஆக.​ 15: ​ திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

​ ​ ​ திருக்காட்டுப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பேரூராட்சிக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

​ ​ ​ கூட்டத்துக்கு பேரூராட்சிக் குழுத் தலைவர் கோகிலா சிங்காரவேலு தலைமை வகித்தார்.​ செயல் அலுவலர் என்.​ கலைச்செல்வன்,​​ தலைமைக் கணக்கர்கள் த.​ குணசேகரன்,​​ என்.​ குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சித் தலைவர் பேசியது:

​ ​ ​ பேரூராட்சிக்குள்பட்ட அலமேலுபுரம்,​​ பழமார்நேரி,​​ அப்பர்சாமி மண்டபம்,​​ ராயர் அக்ரஹாரம்,​​ சேதுரார் காலணி,​​ குடமுருட்டி லயன்கரை தெரு சாலைகள் உள்ளிட்ட 16 இடங்களில் பேரூராட்சி சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.​ 20 லட்சத்தில் சுமார் 7 கி.மீ.​ தொலைவுக்கு புதிய தார்,​​ சிமென்ட் சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

​ ​ ஒன்பத்துவேலி,​​ நடுப்படுகை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்கு,​​ பயன்படுத்தப்பட்டு வரும் 5 குதிரைத்திறன் மின் மோட்டாருக்குப் பதிலாக 10 குதிரைத் திறன் கொண்ட 2 மின் மோட்டார்கள் வாங்கப்படும்.

​ ​ ​ விஷ்ணம்பேட்டை-​ அறந்தாங்கி கூட்டு குடிநீர்த் திட்டத்தின் மூலமாக,​​ குடிநீர் விநியோகக் குழாயிலிருந்து பேரூராட்சி சந்தைக்கு அருகேயுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ​ அனுமதி பெறப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:

​ ​ ​ என்.​ கலைச்செல்வன் ​(செயல் அலுவலர்):​ திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூராக உள்ள சிற்றுண்டி நிலையத்தை இடிக்க வேண்டும்.

​ ​ ​ கர்ணன்,​​ தன்ராஜ் ​(அதிமுக):​ சிற்றுண்டி நிலையத்துக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு பணிகளை தொடர வேண்டும்.

​ ​ ​ டி.என்.​ குணா ​(சுயேச்சை):​ புதுச்சத்திரம் பகுதியில் தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரை அகற்ற வேண்டும்.​ இதனால்,​​ கொசுத் தொல்லை அதிகளவில் உள்ளது.