Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொள்ளாச்சியில் ரூ.6.59 கோடியில் சாலை மேம்பாடு

Print PDF

தினமலர் 20.08.2010

பொள்ளாச்சியில் ரூ.6.59 கோடியில் சாலை மேம்பாடு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் 6.59 கோடி ரூபாயில் சாலைகளை மேம்படுத்த மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டம் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது.

மீனாட்சி (காங்.,): கோட்டாம்பட்டி ராஜூ நகரில் குடிநீர் சரிவர வருவதில்லை. மக்களுக்கு நகராட்சி லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.

வரதராஜன் (கமிஷனர்): குடிநீர் பற்றாக்குறையாகவோ, கிடைக்காவிட்டாலோ தகவல் கொடுத் தால் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்.

மீனாட்சி : அண்ணாநகர் அங்கன்வாடி பள்ளிக்கு இதுவரையிலும் நகராட்சி லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. சமீபகாலமாக அங்கன் வாடி பள்ளிக்கு குடிநீர் வழங்குவதில்லை. வழக்கம் போல் லாரி மூலம் குடிநீர் வழங்க வேண்டும்.

கமிஷனர்: பள்ளி ஆசிரியர்கள் மூலம் நகராட் சிக்கு விண்ணப்பம் கொடுத்தால் நிரந்தரமாக லாரி தண்ணீர் வழங்கப்படும். அல்லது, நகராட்சிக்கு வைப்பு தொகை செலுத்தினால் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும்.

ஜேம்ஸ்ராஜா (.தி.மு..,): பொள்ளாச்சி நகராட்சியில் எல்லா ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்துள்ளது. பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் சுரங்க நடைபாதை கட்டும் பணிகள் தாமதமாக நடப்பதால் ராஜாமில் ரோடு சேதமடைந்து குடிநீர் குழாய் அடிக்கடி உடைகிறது. சுரங்க நடைபாதை அமைக்கும் பணியை வேகப்படுத்தி முடிக்க வேண்டும்.

தலைவர்: சுரங்க நடைபாதை அமைக்கும் பணியில் சென்ட்ரிங் அமைத்து, கான்கிரீட் போடப் பட்டுள்ளது. கான்கிரீட் உறுதியடைந்ததும் ரோடு போடப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்படும். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 12 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பொள்ளாச்சி நகராட்சி அவசர கூட்டத்தில், சாலை மேம்பாட்டு திட்டம் பற்றி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

புதிய திட்டசாலை வடபகுதி, தென்பகுதியை 40 லட்சம் ரூபாயில் திடப்படுத்தி புதுப்பித்தல், நேதாஜி ரோடு - குமரன்நகர் பிரதான சாலையை 40 லட்சம் ரூபாயில் புதுப்பித்து தார் தளம் அமைத்தல் உள்பட மொத்தம் 21 பகுதிகளில் சாலை மேம்பாடு செய்ய 6.59 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கவுன்சில் அங்கீகாரத்துடன் அரசுக்கு அனுப்பி, சாலை மேம்பாடு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் துவங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.