Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி பகுதியில் உள்ள 20 சாலைகள் ரூ4.99 கோடியில் சீரமைப்பு பொலிவு பெறுகிறது ஊட்டி

Print PDF

தினகரன் 20.08.2010

நகராட்சி பகுதியில் உள்ள 20 சாலைகள் ரூ4.99 கோடியில் சீரமைப்பு பொலிவு பெறுகிறது ஊட்டி

ஊட்டி, ஆக. 20: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட செயின்ட் தாமஸ் சர்ச் & பாட்னா அவுஸ் சாலை உட்பட 20 முக்கிய சாலைகளை சிறப்பு சாலை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ4 கோடியே 99 லட்சத்தில் சீரமைக்கப்படவுள்ளது.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகளான எட்டினஸ் சாலை, கமிர்சியல் சாலை, அப்பர் பஜார் மற்றும் லோவர் பஜார் சாலை உள்ளிட்டவை கடந்த 3 ஆண்டுக்கு முன் ரூ12 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. ஆனால் பிற சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக செயின்ட் தாமஸ் & பாட்னா அவுஸ் சாலை, அணிக்கொரை & லோயர்வுட் அவுஸ் மற்றும் ஹிக்கின்ஸ் சாலை உட்பட பல்வேறு சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதன்படி ஊட்டி நகராட்சியின் அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு சாலைகள் சீரமைக்கும் திட்டம் 2010&11ன் கீழ் ஊட்டி நகராட்சியில் 7 முக்கிய சாலைகள் சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி செயின்ட் தாமஸ் சர்ச், லோயர்வுட் அவுஸ் மற்றும் ஹிக்கின்ஸ் சாலை ரூ48 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 1.76 கி.மீ., தூரம் சீரமைக்கப்படவுள்ளது. அணிக்கொரை சாலை, லோயர்வுட் அவுஸ் சாலை, கீழ்கோடப்பமந்து சாலை, மெயின் பஜார் சாலை மற்றும் அப்பர் பஜார் சாலை ஆகியவைகள் ரூ69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 3.59 சி.மீ., தூரம் சாலை சீரமைக்கப்படுகிறது.

பழைய அக்ரஹாரம் சாலை, ஆட்லி சாலை, கீழ் கோடப்மந்து சாலை, மெயின் பஜார் சாலை, மற்றும் அப்பர் பஜார் சாலை ஆகியவை ரூ69 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 3.20 கி.மீ., தூரம் சீரமைக்கப்படுகிறது. ரிட்சிங்காலனி பைபாஸ் சாலை, கிராண்டப் சாலை, மற்றும் டைகர் ஹில் ஆகிய சாலைகள் ரூ96 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 5.19 கி.மீ., சாலையும், ரெட்கிராஸ் சாலை, தீட்டுக்கல் சாலை மற்றும் ஆர்ம்பி அவுஸ் சாலை ரூ75 லட்சம் மதிப்பில் 3.43 கி.மீ., சாலை சீரமைக்கப்படவுள்ளது. ஆர்.கே.புரம் சாலை மற்றும் கிளன்ராக் சாலை ரூ96 லட்சத்தில் 3.7 கி.மீ., தூரம் சாலையும், விஜயநகரம் காலனி சாலை மற்றும் எல்க்ஹில் சாலை ஆகியவை ரூ44 லட்சத்து 20 ஆயிரம் செலவில் 2.36 கி.மீ., தூரம் சாலை சீரமைக்கப்படவுள்ளது.

தற்போது இச்சாலைகள் சீரமைக்கப்படும் நிலையில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான சாலைகள் பொலிவு பெறும். இச்சாலைகள் வரும் சீசனுக்குள் இச்சாலைகள் சீரமைக்கப்பட்டுவிட்டால், சுற்றுலா பயணிகள் வாகனங்கள் சென்று வர ஏதுவாக இருக்கும். தற்போது இச்சாலைகளுக்கான டெண்டர் விடும் பணியும் துவங்கியுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு சாலைகள் தேர்தலுக்குள் சீரமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Friday, 20 August 2010 08:42