Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 2.66 கோடியில் சாலைகளை மேம்படுத்தத் திட்டம்

Print PDF

தினமணி 21.08.2010

ரூ. 2.66 கோடியில் சாலைகளை மேம்படுத்தத் திட்டம்


திருப்பூர், ஆக.20: சிறப்பு சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ 2.66 கோடி மதிப்பில் 15வேலம்பாளையம் நகராட்சி பகுதியிலுள்ள சாலைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, கூடுதலாக 5 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் கூடிய நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

18 லட்சம் கொள்ளளவு

நீர் தேக்கத் தொட்டிகள்

திருப்பூர் அடுத்த 15வேலம்பாளையம் நகராட்சிக்கு முதலாவது கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 2 லட்சம் லிட்டரும், 2-வது கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் 18 லட்சம் லிட்டரும், 3-வது கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் 31 லட்சம் லிட்டருமாக நாளொன்றுக்கு மொத்தம் 51 லட்சம் லிட்டர் குடிநீர் நகராட்சி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

குடிநீரை விநியோகம் செய்ய அனுப்பர்பாளையத்தில் 3.50 லட்சம் லிட்டர் கொள்ள ளவில் மேல்நிலைத் தொட்டி, வேலம்பாளையத்தில் 4.50 லட்சம் லிட்டரில் 2 மேல்நி லைத் தொட்டிகள், அதேபகுதியில் 4.50 லட்சம் லிட்டரில் 2 கீழ்நிலைத் தொட்டிகளும், சாமுண்டிபுரத்தில் 1.50 லட்சம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி, பெரியார் காலனியில் 2 லட்சம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி, மூகாம்பிகை காலனியில் ஒரு லட்சம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி, ஈபி காலனியில் ஒரு லட்சம் லிட்டர் கீழ்நிலைத் தொட்டி என நகராட்சிப் பகுதியில் 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டிகள் உள்ளன.

நீர்த் தேக்கத் தொட்டிகள் தேவை

பெருகிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை அடுத்து தற்போது புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் மூலம் கூடுதலாக 20 லட்சம் லிட்டர் குடிநீர் பெற நிர்வாக அனுமதிக்காக நகராட்சி நிர்வாக இயக்குநரகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே கிடைக்கும் 51 லட்சம் லிட்டர் குடிநீருடன், பெற உள்ள 20 லட்சம் குடிநீரையும் சேர்த்து நாளொன்றுக்கு 71 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து வைக்க தற்போதுள்ள நீர்தேக்கத் தொட்டிகள் போதுமானதாக இல்லை.

17-வது வார்டில்

மேல்நிலை தொட்டி

இதையடுத்து, கூடுதலாக 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை 17-வது வார்டு சோளிபாளையத்தில் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான தீர்மானம், நகர்மன்றத் தலைவர் எஸ்.பி.மணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றம்

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும் நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், நகராட்சிப் பகுதி முழுவதும் 2010-11ம் ஆண்டு சிறப்புச் சாலைகள் திட்டத்தின்கீழ் | 2.66 கோடி மதிப்பில் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் மேம்படுத்துவதற்கான தீர்மானத்துக்கும் நகர்மன்றம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, இரு தீர்மானங்களும் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பப்பட்டு நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும். நகராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் த.சரோஜா, செயல் அலுவலர் குற்றாலிங்கம் பங்கேற்றனர்.