Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நான்குநேரி தொகுதியில் சாலைகளை மேம்படுத்த 5கோடி ரூபாய் ஒதுக்கீடு : எம்.எல்.ஏ வசந்த குமார் தகவல்

Print PDF

தினமலர் 24.08.2010

நான்குநேரி தொகுதியில் சாலைகளை மேம்படுத்த 5கோடி ரூபாய் ஒதுக்கீடு : எம்.எல்.ஏ வசந்த குமார் தகவல்

களக்காடு : நான்குநேரி சட்டசபை தொகுதியில் நடப்பு ஆண்டு 5கோடி ரூபாய் செலவில் சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளது என எம்.எல்.. வசந்தகுமார் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்குநேரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட மாவடியிலிருந்து பத்மனேரி வரையுள்ள 6 கி.மீ ரோட்டை இருவழித் தடமாக மாற்ற 1.20 கோடி ரூபாயும், நான்குநேரி- ஏர்வாடி ரோட்டை மேம்படுத்த 42லட்சமும், மருதகுளம்- மூலக்கரைப்பட்டி சாலையை மேம்படுத்த 33லட்சமும், கரந்தாநேரி- சுப்பிரமணியபுரம் சாலையை மேம்படுத்த 24லட்சமும், விஜய நாராயணம்- இட்ட மொழி வரையுள்ள 2 கி.மீ தூர சாலையை மேம்படுத்த 16லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர முனைஞ்சிப்பட்டி-சேரகுளம் உள்ள 3கி.மீ சாலையை மேம்பாடு செய்ய 35லட்ச ரூபாயும், இட்டமொழி- ஆலங்கிணறு சாலை செப்பனிட 24லட்சமும், மலையன்குளம் சாலையை மேம்படுத்த 11லட்சமும், களக்காடு- சிதம்பராபுரம், பெரும்பனை- நன்னிகுளம் சாலைகளை மேம்படுத்த தலா 14லட்சமும், ஏர்வாடி- திருக்குறுங்குடி சாலையை மேம்படுத்த 15லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரெட்டியார்பட்டி- விஜயநாராயணம் சாலையை மேம்படுத்த 20லட்ச ரூபாயும், கருங்கடல்- முனைஞ்சிப்பட்டி சாலையை மேம்படுத்த 30லட்சமும், ஏர்வாடி- மாவடி சாலையை மேம்படுத்த 24லட்சமும், மூன்றடைப்பு- புதுக்குறிச்சி சாலையை மேம்படுத்த 48லட்சமும், சிங்கிகுளம்- பானான்குளம் சாலையை மேம்படுத்த 20லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை நான்குநேரி எம்.எல்.. வசந்த குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.