Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.11.65 கோடியில் சாலை மறுசீரமைப்பு

Print PDF

தினமலர் 24.08.2010

ரூ.11.65 கோடியில் சாலை மறுசீரமைப்பு

நாமக்கல்: "சிறப்பு சாலை திட்டம் 2010-11ன் கீழ், 39.90 கி.மீ., சாலைகளை 11.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு வழிகாட்டுதல்படி மறுசீரமைப்பு செய்வது' என, நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் செல்வராஜ் தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) பாலசந்திரன், துணைத்தலைவர் பூபதி, சுகாதார ஆய்வாளர் முகமது மூசா, நகர அமைப்பு அலுவலர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் விபரம்: பாண்டியன் (தி.மு..,): நகரில் குடிநீர் பிரச்னை கடுமையாக உள்ளது. ஒரு வார்டில் பத்து நாட்களுக்கு ஒருமுறையும், மற்றொரு வார்டில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து உதவி பொறியாளரிடம் கேட்டால், "எனக்கு தெரியாது' என மழுப்புகின்றனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கையை கூட அதிகாரிகள் தட்டிக்கழிக்கின்றனர். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறுமா? நிறைவேறாதா? என்ற சந்தேகம் கவுன்சிலர்களுக்கே எழுந்துள்ளது. இப்பணிகளை விரைவில் முடிக்க வலியுறுத்தி, கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்.

செல்வராஜ் (சேர்மன்): புதிய குடிநீர் திட்டம் முடிவடைந்தால், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டு ஆகும். விரைவில் முடிப்பதற்காக அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இம்ரான் (தி.மு..,): எனது வார்டில் சாக்கடை சுத்தம் செய்யப்படுவதில்லை. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சேர்மன்: ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பணிகள் முடிக்க முடியாமல் உள்ளது. ஒவ்வொரு பிரச்னையாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து கூட்டத்தில், சிறப்பு சாலை திட்டம் 2010-11ன் கீழ் 39.90 கி.மீ., சாலைகளை 11.65 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்ய மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. மத்திய அரசின் நகர்ப்புற வறுமை நீக்குதல் அமைச்சகத்தின் மூலம் சொர்ண ஜெயந்தி சகாரி யோஸ்கர் யோஜ்னா திட்டத்தின் கீழ், 2010-11ம் நிதி ஆண்டில் பெறப்பட்ட மானிய தொகை 12.62 லட்சம் ரூபாயை செலவு செய்ய மன்ற கூட்டத்தில் அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.