Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழகத்தில் 83 சாலைகளை அகலப்படுத்த ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 24.08.2010

தமிழகத்தில் 83 சாலைகளை அகலப்படுத்த ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு

நெல்லை, ஆக. 24: தமிழகத் தில் 83 சாலைகளை அகலப்படுத்தி, உறுதிப்படுத்த ரூ.137 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் தமிழகத்தில் 150 சாலைப்பணிகளை நபார்டு வங்கி கடனுதவியுடன் ரூ.250 கோடியில் செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் கடந்த 2009ம் ஆண்டு 56 மாவட்ட இதர சாலைகளை ரூ.113 கோடியில் சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. மீதம் உள்ள 94 பணிகளில் 11 பணிகளை நபார்டு வங்கி நீக்கம் செய்து ரூ.136 கோடியே 80 லட்சம் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் 44 மாவட்ட இதர சாலைகள், 39 மாவட்ட முக் கிய சாலைகளை அகலப்படுத்தி உறுதிப்படுத்தி மேம் பாடு செய்ய அனுமதி வழங்குமாறு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அரசு இதை பரிசீலித்து 83 சாலைப்பணிகளுக்கு ஒப்பு தல் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியில் 80 சதவீத தொகையான ரூ.109 கோடியே 45 லட்சம் நபார்டு வங்கி கடனாகவும், 20 சதவீத தொகையான ரூ.27 கோடியே 36 லட்சம் தமிழக அரசின் பங்காகவும் இருக் கும்.

இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் மாவட்ட இதர சாலைகள் பட்டியலில் உள்ள நாங்கு நேரி தொகுதி பத்மநேரி& சிங்கிகுளம் சாலை ரூ.3 கோடியே 69 லட்சத்து 80 ஆயிரம் செலவிலும், கடையநல்லூர் தொகுதி சங்கனாப்பேரி&மீனாட்சிபுரம் சாலை ரூ.1 கோடியே 77 லட்சத்து 88 ஆயிரம் செல விலும், பாளை தொகுதி தருவை&சிங்கிகுளம் சாலை ரூ.2 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரம் செலவிலும், கடையநல்லூர் தொகுதி சுந்தரேசபுரம்&மீனாட்சிபுரம் சாலை ரூ.1 கோடியே 3 லட் சத்து 88 ஆயிரம் செலவிலும், ராதாபுரம் தொகுதி ராதா புரம்&இருக்கன்துறை சாலை ரூ.2 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரம் செலவிலும் மேம்படுத்தப்பட உள்ளதாக அரசு செயலாளர் சந்தானம் தெரிவித்துள்ளார்.