Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பீர்க்கன்காரணை பேரூராட்சியில் தார்சாலை அமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 30.08.2010

பீர்க்கன்காரணை பேரூராட்சியில் தார்சாலை அமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு

தாம்பரம், ஆக.30: பீர்க்கன்காரணை பேரூராட்சி பகுதியில் பழுதடைந்த சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்ற ரூ1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பேரூராட்சி தலைவர் த.ராசேந்திரன் தெரிவித்துள்ளார். பீர்க்கன்காரணை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் பழுதடைந்த 40க்கும் மேற்பட்ட சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்ற ரூ1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு பணி தொடங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சுவாமி விவேகானந்தர் தெரு விரிவு பகுதியில் ரூ11 லட்சத்து 50 ஆயிரத்திலும், ஏரிக்கரை சாலையில்

ரூ10 லட்சத்திலும், அன்னை தெரசா பகுதியில் 1, 2, 3வது தெருக்கள், கிருபானந்தவாரியார் தெரு, காந்தி ரோடு மற்றும் அண்ணா தெரு, தொல்காப்பியர் தெரு, டி.கே.சிதம்பரனார் தெரு மற்றும் லட்சுமிநகர் 2வது குறுக்கு தெரு, இராஜாஜி தெரு, அர்ச்சனா நகர், டி.டி.கே.நகரில் 2, 3வது குறுக்கு தெரு, அமுதம் நகர், சக்தி நகரில் 1, 2, 4, 6, 7, 8வது தெரு உட்பட பல்வேறு தெருக்களில் தலா ரூ4 லட்சம் செலவில் தார்ச்சாலைகள் அமைக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை பேரூராட்சி தலைவர் ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.