Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை சீரமைப்புக்கு ரூ71 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 31.08.2010

சாலை சீரமைப்புக்கு ரூ71 கோடி ஒதுக்கீடு

கரூர், ஆக.31: கரூர் நகராட்சியில் சாலை சீரமைப்பு மற்றும் வடிகால்களை புதுப்பிக்க ரூ71 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படடுள்ளது. 2010&2011ம் ஆண்டு சிறப்பு சாலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நகராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் களை புதுப்பிக்கும் பணிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் வழிகாட்டுதல் படி பணிகள் தேர்வு செய்யப்பட்டன. கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பழுதடை ந்த தார்சாலைகள், சிமென்ட் சாலைகளை புதுப்பிக்கவும், சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால்களை சீர் செய்யவும் நேராய்வு செய்து மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

36 வார்டுகளிலும் தார்சாலை புதுப்பித்தல், சிமென்ட் தளம் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், சிறுபாலம் அமைத்து சிமென்ட் தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான மதிப்பீடுகள் நகர்மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டது. அனைத்து வார்டுகளுக்கும் ரூ71 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

நகர்மன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டிய பணிகளை அளித்தனர். அனைத்து வார்டு தேவைகளையும் ஒருங்கிணைத்து திட்டப்பணிகள் பற்றி விவரம் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது. இயக்குனர் அலுவலகத்தில் இருந்த இதனை பரிசீலித்த பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.