Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆற்காட்டில் ரூ6 கோடியில் சிறப்பு சாலைகள் திட்டம் நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன் 31.08.2010

ஆற்காட்டில் ரூ6 கோடியில் சிறப்பு சாலைகள் திட்டம் நகராட்சி தலைவர் தகவல்

ஆற்காடு, ஆக.31: ஆற்காடு நகரம் முழுவதும் 25 கி.மீட்டருக்கு ரூ6 கோடியில் சிறப்பு சாலை திட்டம் தயா£¤க் கப்பட்டுள்ளதாக நகராட்சி தலைவர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கூறினார்.

ஆற்காடு நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் தலைமையில்நடந்தது. துணைத் தலைவர் பொன்.ராஜசேகர், ஆணையாளர் செ.பாரிஜாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

கே..சுந்தரம் (சுயே):

துப்புரவு பணியாளர்களில் 10 சதவீதம் பேர் கையெழுத்து மட்டும் போட்டு விட்டு பணி செய்வதில்லை. துப்புரவு மேற்பார்வையாளர்கள் அதனை கண்காணிக்க வேண்டும்.

நந்தகுமார் (பாமக):

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஸ் நிலையத்தில் அரசு மதுபானக்கடை உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

தாமு(சுயே):

ஆற்காடு, ஆரணி சாலையில் கழிவுநீர் கால்வாய் சா¤யாக துர்வாராததால் கழிவுநீர் கடைகளின் உள்ளே சென்று சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

செல்வம் (பாமக):

15 வார்டுகளுக்கு மட்டுமே டி.வி தரப்பட்டுள்ளது. மீதி 15 வார்டுகளுக்கு உடனே தரப்படும் என கலெக்டர் கூறினார். ஆனால் 3 மாதம்ஆகியும் இதுவரை தரவில்லை என்று கூறி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

தலைவர் ஈஸ்வரப்பன்:

15 வார்டுகளுக்கும் டி.வி. வழங்க டோக்கன் தரப்பட்டுள்ளது. விரைவில் டி.வி. தரப்படும். அதைத்தொடர்ந்து கவுன்சிலர் செல்வம் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டார். மேலும் தலைவர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் பேசுகையில் ஆற்காடு நகரம் முழுவதும் 25 கி.மீ தூரத்திற்கு ரூ6 கோடியில் சிறப்பு சாலை திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். பின்னர் நடந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.