Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை சீரமைப்புக்கு திட்ட மதிப்பீடு விருத்தாசலம் நகர்மன்றத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி 31.08.2010

சாலை சீரமைப்புக்கு திட்ட மதிப்பீடு விருத்தாசலம் நகர்மன்றத்தில் தீர்மானம்

விருத்தாசலம். ஆக. 30: விருத்தாசலத்தில் நகர்மன்ற அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

÷இதில் பழுதடைந்த மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலைகளை சிறப்பு சாலைத் திட்டம் 2010-11 திட்டத்தின் கீழ் சீரமைக்க தேர்வு செய்து நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு விரிவான திட்ட மதிப்பீடு அனுப்ப கூட்டத்தில் அனுமதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேமுதிக வெளிநடப்பு

÷முன்னதாக தேமுதிக நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ் எனக்கு கூட்டம் நடப்பதற்கான அழைப்பு வரவில்லை. இதற்கான காரணம் எனக்கு தெரிய வேண்டும் என ஆணையர் திருவண்ணாமலையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து ஆணையர் திருவண்ணாமலை அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு வழங்கிய நகராட்சிப் பணியாளரிடம் தேமுதிக உறுப்பினர் ரமேஷுக்கு அழைப்பு வழங்கவில்லையா என விசாரித்தார். அதற்கு நகராட்சி பணியாளர், நான் கூட்டம் நடப்பது குறித்த தகவலை தெரிவிக்க நகர்மன்ற உறுப்பினர் ரமேஷுக்கு போன் செய்தபோது போன் சுட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என தெரிவித்தார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த தேமுதிக நகர்மன்ற உறுப்பினர் ரமேஷ் வெளிநடப்பு செய்தார்.

÷கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் வ..முருகன் தலைமை ஏற்றார். ஆணையர் திருவண்ணாமலை முன்னிலை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.