Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ 2.32 கோடியில் சாலைகள், வடிகால்கள் சீரமைப்பு

Print PDF

தினமணி 31.08.2010

ரூ 2.32 கோடியில் சாலைகள், வடிகால்கள் சீரமைப்பு

தக்கலை, ஆக. 30: பத்மநாபபுரம் நகராட்சியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ 2.32 கோடியில் 40 சாலைகள், மற்றும் மழைநீர் வடிகால்கள் சீரமைக்க திங்கள்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அ.ரேவன்கில் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் செல்லமுத்து, பொறியாளர் சனல்குமார், ஆரம்ப சுகாதார ஆய்வாளர் முருகேசன், வருவாய் ஆய்வாளர் பெருமாள், துணைத் தலைவர் முகமது சலீம், மற்றும் உறுப்பினர்கள் 20 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியவுடன் தலைவர் அ.ரேவன்கில், இயற்கை மற்றும் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள சாலைகள் மற்றும் சாலை அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகி பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய அரசு ரூ 2.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி புலியூர்குறிச்சி சந்தை வழி தேசிய நெடுஞ்சாலை முதல் பத்மநாபபுரம் கோட்டை சுவர்வரை கருந்தளம் புதுப்பித்தல், மழைநீர் வடிகால் அமைத்தல்.

குமாரகோவில் வேளிமண்டபம் முதல் நூருல் இஸ்லாம் கல்லூரி வரை கருந்தளம் அமைத்து மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைத்தல்,

வார்டு எண் 5 அண்ணா காலனி முதல் கோட்டைச்சுவர் கிழக்கு தெற்கு மூலை வரை கான்கிரிட் தளம் அமைத்தல், அரண்மனை சாலை முதல் துப்பரவு பணியாளர் குடியிருப்பு வரை மழைநீர் வடிகால் அமைத்து கருந்தளம் புதுப்பித்தல்,

இது போன்று பல்வேறு வார்டுகளில் சாலைகள் செப்பனிடவும், வடிகால்கள் கட்டவும் மொத்தம் 22 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பழுடைந்தசாலைகள் 18 கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 40 பழுதடைந்த சாலைகள், வடிகால்கள் சீரமைக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

உறுப்பினர் முகமதுராபி பேசுகையில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பஸ்பாஸ், ஓய்வூதியம் போன்ற சலுகைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தக்கலை பேருந்து நிலையத்தில் நுழைவு வாயில் இல்லை. எனவே நுழைவுவாயில் கட்டி காமராஜர் பெயர் வைக்கவேண்டும் என்றார் முகமது ராபி.

இதற்கு பதிலளித்து தலைவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் உறுப்பினர்களின் அமர்வு படி ரூ 330 ஆக இருந்ததை ரூ 600 உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் பணி செய்யதான் நாம் வந்துள்ளோம். இதை தீர்மானமாக நிறைவேற்றி அனுப்ப முடியாது. அரசு தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பின்பு கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள 8 புதிய கடைகளுக்கும் மறு ஏலம் நடத்தப்படும் எனறார் தலைவர்.